Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மார்ச் மாத ராசிப் பலன்கள் - மீனம்

Advertiesment
மார்ச் மாத ராசிப் பலன்கள் - மீனம்
, செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (23:45 IST)
வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை உணர்ந்தவர்களே! இந்த மாதம் முழுக்க புதனும், சுக்ரனும் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் எங்குச் சென்றாலும் மதிப்பு, மரியாதைக் கூடும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.

நண்பர்கள், உறவினர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். பாதியில் நின்றுப் போன வீடு கட்டும் பணி வங்கிக் கடன் உதவியுடன் மீண்டும் தொடர்வீர்கள். பழைய நண்பர்கள், உறவினர்கள் உங்களுடைய புதிய திட்டத்திற்கு ஆதரவாக இருப்பார்கள். ராகு 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் நீண்ட நாளாக தள்ளிப் போன காரியங்களெல்லாம் முடிவடையும். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். சிலருக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு மனை வாங்குவீர்கள்.

சூரியன் சாதகமாக இல்லாததால் பழைய கடன், வழக்குகள் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். அரசு காரியங்கள் சற்று தாமதமாக முடியும். தூக்கம் குறையும். செவ்வாய் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் மகிழ்ச்சி உண்டாகும். பேச்சில் கம்பீரம் தெரியும். உடன்பிறந்தவர்களுடனான மோதல்கள் விலகும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும்.

9-ந் தேதி வரை ராசிநாதன் குரு 8-ல் மறைந்திருப்பதால் எதிர்பாராத பயணங்கள் அதிகமாகும். பண விஷயத்தில் சாக்குப் போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் விமர்சனங்கள் அதிகரிக்கும். ஆனால் 10-ந் தேதி முதல் குரு 7-ல் அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்க்கயிருப்பதால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். தடைப்பட்டு வந்த கல்யாண முயற்சிகள் பலிதமாகும். ஆடை, ஆபரணம் சேரும்.

கன்னிப் பெண்களே! காதல் விஷயத்தில் தெளிவான முடிவுகளெடுப்பீர்கள். பெற்றோர் பாசமழைப் பொழிவார்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். வேலையாட்கள் முரண்டு பிடிப்பார்கள். பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வீர்கள். உத்யேகத்தில் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

என்னதான் உண்மையாக உழைத்தாலும் எந்த பலனும் இல்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். உண்மையாக இருப்பது மட்டும் போதாது உயரதிகாரிகளுக்கு தகுதாற்போலும் பேசும் வித்தையையும் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற முடிவிற்கு வருவீர்கள். கலைத்துறையினரே! எதிர்பார்த்து ஏமாந்துப் போன வாய்ப்பு இப்போது கூடி வரும். புதியவர்களின் நட்பால் மாறுபட்ட பாதையில் பயணிக்கும் மாதமிது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மார்ச் மாத ராசிப் பலன்கள் - கும்பம்