Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மார்ச் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – சிம்மம்!

Advertiesment
Simmam

Prasanth Karthick

, புதன், 26 பிப்ரவரி 2025 (17:10 IST)
சிம்மம்:


கிரகநிலை:


தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் கேது -களத்திர  ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன், சனி -அஷ்டம  ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் - தொழில்  ஸ்தானத்தில் குரு - லாப  ஸ்தானத்தில் செவ்வாய் என வலம் வருகிறார்கள்

கிரகமாற்றங்கள்:

04-03-2025 அன்று சுக்ரன் பகவான் வக்ரம் ஆகிறார்.
09-03-2025 அன்று புதன் பகவான் வக்ரம் ஆகிறார்.
14-03-2025 அன்று சூரிய பகவான் களத்திர  ஸ்தானத்தில்  இருந்து அஷ்டம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
18-03-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் புதன் பகவான் அஷ்டம  ஸ்தானத்தில்  இருந்து களத்திர  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
30-03-2025 அன்று புதன் வக்ர நிவர்த்தி ஆகிறார்.

பலன்:
எதைக்கண்டும் அஞ்சாமல் தைரியமாக நிமிர்ந்து நிற்கும் சிம்ம ராசி அன்பர்களே இந்த மாதம்  முயற்களுக்குப் பிறகு வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மற்றவர்களுடன் இருந்த விரோதம் மறைந்து நட்பு ஏற்படும். வீண்செலவு குறையும். எதிலும் ஒரு வேகத்தை உண்டாக்கும். நல்லதா? கெட்டதா? என்று யோசிக்க தோன்றாத மனநிலை உண்டாகும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறி வேகம் பிடிக்கும். வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். தொழில் தொடர்பான பயணம் செல்ல நேரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புத்தி சாதூர்யம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். பணி உயர்வு சம்பந்தமான தேர்வுகளில் தேர்ச்சி பெறுவீர்கள். மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழும்.

குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். திருமண முயற்சிகள் கைகூடும்.  வாழ்க்கை துணையால் பணவரத்து இருக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். உறவினர்களுடன் இருந்த மன வருத்தம் நீங்கும். குடும்பத்தில் பொன்னான தருணங்கள் நிகழும்.

பெண்களுக்கு மற்றவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கி நட்பு உண்டாகும்.  எந்தஒரு வேலையிலும் வேகத்தை காண்பீர்கள். செலவு குறையும்.

கலைத்துறையினருக்கு வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சல் உண்டாகலாம். காரியங்கள் அலைச்சலுக்கு பின் நடந்து முடியும். தேவையான பண உதவி சற்று தாமதமாக கிடைக்கலாம். தொழில் தொடர்பாக எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும்.

அரசியல் துறையினருக்கு வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. உதவிகள் செய்யும்போது ஆலோசித்து செய்வது நல்லது.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பயணம் செல்ல நேரலாம். திறமை வெளிப் படும். சாமர்த்தியமான பேச்சு இருக்கும்.


மகம்:
இந்த மாதம் உறவினர்கள் வகையில் தவிர்க்கமுடியாத சுபச் செலவுகளை சுமக்க நேரும். முக்கியமான பயணமும், முக்கிய பிரமுகர்களின் சந்திப்பும் உண்டாகும். அது உங்கள் எதிர்காலத்துக்கு நல்ல அஸ்திவாரமாக இருக்கும். சிலர் கூட்டு முயற்சிகளில் லாபம் தேடலாம். சிலர் குடும்பத்தினரோடு கூட்டுச் சேர்ந்து தொழில் செய்து லாபம் பார்க்கலாம்.


பூரம்:
இந்த மாதம் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.  தொழில், வேலை, உத்தியோகம் ஆகியவற்றில் வெற்றி அடையலாம்.  சேமிப்பும் அடையலாம். உங்கள் உழைப்பும் நம்பிக்கையும் உங்களுக்கு முழுமையான பலனையும் திருப்தியையும் தரும். எதிர்ப்பும் இடையூறும் ஒருபுறம் இருந்தாலும், உங்களின் தன்னம்பிக்கையாலும் தைரியத்தாலும் அவற்றைப் போராடி எதிர்த்துநின்று வெற்றிகொள்வீர்கள்.


உத்திரம்:
இந்த மாதம் கடமைகளைக் காப்பாற்றுவீர்கள். பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது என்றாலும், வைத்தியச் செலவும் அல்லது வீண்விரயச் செலவும் தவிர்க்க முடியாததாக இருக்கும். அதனால் சிலசமயம் விரக்தி ஏற்படலாம்.  ஜாதக தசாபுக்தியை அனுசரித்து தேவையான பரிகாரங்களைச் செய்து கொள்வதால், மனதில் ஆறுதலும் நம்பிக்கையும் உண்டாகும்.

பரிகாரம்: சிவனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிலும் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 3, 29, 30
அதிர்ஷ்ட தினங்கள்:  22, 23

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மார்ச் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – கடகம்!