Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அனைத்து தடைகளும் விலகி ஐஸ்வர்யங்களை தரும் தாமரை மணிமாலை....!!

Advertiesment
அனைத்து தடைகளும் விலகி ஐஸ்வர்யங்களை தரும் தாமரை மணிமாலை....!!
தாமரை மணிமாலை ஒரு இடத்தில் இருக்கிறது என்றால் அதை சுற்றி நல்ல விஷயங்களே நடக்கும். தீய தடைகள் ஏதும் நிற்காது.


பாசிட்டிவான விஷயங்கள்  நடந்தால் அனைத்திலும் முன்னேற்றம் தானே. அப்போது பொருளாதாரத்தின் வளர்ச்சி உச்சத்தில்தானே இருக்கும். நம்பிக்கை இல்லாமல் செய்தால் வெற்றி  கிடைக்காது.  
 
தாமரை மணிமாலை இயற்கையின் அருளை வாங்கி வெளியிடும் தன்மை உடையதால் என்பதால்தான் அருள் சாதனங்கள் எனப் பெயர் பெறுகின்றன. அப்படிப்பட்ட ஒன்றுதான் தாமரை மணிமாலை. லட்சுமி தேவி தாமரையில் வசிப்பதால், வீட்டில் தாமரை விதைகளில் செய்யப்பட்ட மணி மாலையை வைத்திருப்பது, அவரை நம் வீட்டிற்கு வரவழைக்க செய்யும். 
 
இயற்கையில் கிடைக்கும் காற்றுக்கு கூட சக்தி உண்டு. அதை எப்படி உபயோகப்படுத்துவது என்பதில்தான் உள்ளது. அப்படிதான் தாமரை மணிமாலையும்  தடைகளை நீக்கி உயர்வான வாழ்க்கைக்கு அஸ்திவாரம் இடுகிறது.
 
அபரிமிதமான நேர்மறை சக்தியை கொண்ட தாமரை மணி மாலை பணம் ஈர்க்கும் மாலையாக மக்களுக்கு நல்லவற்றை அள்ளித்தருகிறது. குடும்பத்தில் ஏற்படும்  பிணக்குகள், ஒற்றுமை இல்லாதது, சகோதரர்கள் இடையேயான பிரச்னை, பொருளாதாரத்தில் நலிவு, வேலை கிடைக்காமல் தொடர்ந்து தடை ஏற்பட்டு வருவது  போன்ற பலவற்றுக்கும் தீர்வை அளிக்கிறது தாமரை மணிமாலை.
 
இந்த தாமரை மணி மாலை ஒரு வீட்டில் இருக்கிறது என்றால் அனைத்து ஐஸ்வர்யங்கள் அங்கு அதிகளவில் ஏற்படும் என்று அனுபவப்பூர்வமாக கண்டறியப்பட்ட ஒன்று. நம்பி செயல்பட்டால் அனைத்து தடைகளும் விலகி ஐஸ்வர்யங்கள் வீட்டை நிறைக்கும் இந்த தாமரை மணிமாலையால்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார்த்திகை நட்சத்திர நாளில் மேற்கொள்ளும் விரதமும் பலன்களும் !!