Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிவன் கோயிலை வலம் வருவது எவ்வாறு தெரியுமா...?

Advertiesment
சிவன் கோயிலை வலம் வருவது எவ்வாறு தெரியுமா...?
சிவாலயத்துக்குச் சென்று வழிபாடுகிறவர்கள் தம்முடைய உடம்பையும் உள்ளத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
ஸ்நானம் செய்து விபூதி அணிந்து ருத்திராட்சம் பூண்டு, பூஜைக்குரிய பூ, பழம், தாம்பூலம் ஆகியவற்றுடன் ஆலய வாயிலை அடைந்து, கால் கைகளைச் சுத்தி செய்து கொண்டு உள்ளே செல்ல வேண்டும்.
webdunia
பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், பிள்ளை பாக்கியம் கிடைக்கும், வறுமை விலகும். நோய்கள் நீங்கும், சகலகாரியங்களில் வெற்றிகிடைக்கும், சகல சௌபாக்கியங்களையும் தரக்கூடியது பிரதோஷ விரதம்.
 
பிரதோஷ காலம் என்பது சூரியன் அஸ்தமனத்திற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் சூரியன் அஸ்தமனத்திற்கு பின் மூன்றே முக்கால்  நாழிகையும் ஆகும். ஒருநாழிகை என்பது 24 நிமிடங்கள். ஒரு மணிக்கு இரண்டரை நாழிகைகள். ஆக சராசரியாக மாலை 4 மணியில் இருந்து  இரவு 7.30 வரை பிரதோஷ காலம் உண்டு. சவுகரியத்திற்காக மாலை 4.30 முதல் 6.00 வரை என சொல்லப்படுகிறது.
 
சிவாலயங்களை பிரதோஷ காலத்தில் பின்வருமாறுதான் வலம் வர வேண்டும். இந்த பிரதட்சணம் சோம சூக்த பிரதட்சணம் என்று  வழங்கப்படுகிறது
 
நந்தி பெருமானிடம் இருந்து புறப்பட்டு இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை வணங்கி அங்கிருந்து திரும்பி நந்திபெருமானிடம் வணங்கி இரு கொம்புகளிடையே சிவதரிசனம் செய்து அங்கிருந்து வலப்புறமாக சென்று கோமுகி வரை சென்று கோமுகியை வணங்கி பின்னர் திரும்பி  நந்தி தேவரிடம் வந்து வணங்கி சண்டிகேஸ்வரரை வணங்க வேண்டும். 
 
பின்னர் அங்கிருந்து திரும்பி நந்திதேவரை வணங்கி கோமுகியை வணங்கவேண்டும். அங்கிருந்து வந்து சண்டிகேஸ்வரரை வணங்கிவிட்டு நந்தி தேவரிடம் பிரதட்சணத்தை முடிக்க வேண்டும். இது சோமசூக்த பிரதட்சணம் என்று வழங்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நம் உடல் பாகங்களில் பல்லி எங்கு விழுந்தால் என்ன பலன்கள்...!