Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைரவர் வழிபாட்டு முறைகளும் பலன்களும் !!

Webdunia
சனி, 5 மார்ச் 2022 (17:15 IST)
பைரவர் வழிபாடு பயம் போக்கும். பைரவர் வழிபாடு திருமணம் யோகம் கைகூடும். வெள்ளிக்கிழமை, ராகு கால நேரத்தில் பைரவருக்கு விபூதி அபிஷேகம் செய்து, வடை மாலை சாற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமண பாக்கியம் விரைவில் கைகூடும்.


குழந்தைபாக்கியம் பெற, தொடர்ந்து ஆறு தேய்பிறை அஷ்டமி தினங்கள் சிவாலயங்களுக்குச் சென்று, பைரவ மூர்த்திக்கு செவ்வரளி மாலை சாற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

இழந்த பொருள் - சொத்துகளைத் திரும்பப் பெற, பைரவர் சந்நிதியில் நெய் தீபம் ஏற்றி வைத்து மனமுருகிப் பிரார்த்தித்து அர்ச்சனை செய்து வழிபட்டால், இழந்த பொருள் மற்றும் சொத்துகள் திரும்பக் கிடைக்கும்.

வறுமை நீங்க வெள்ளிக்கிழமை மாலை வேளையில், வில்வ இலைகள் மற்றும் வாசனை மலர்களால் பைரவரை அர்ச்சனை செய்து வழிபட்டால் வறுமை அகலும்.

நோய்கள் தீர, யமபயம் நீங்க ஞாயிற்று கிழமை ராகுகாலம், தேய்பிறை அஷ்டமி ஆகிய தினங்களில் பைரவருக்கு நடை பெறும் வழிபாடுகளில் கலந்துகொண்டு, பைரவருக்கு மஞ்சள் மற்றும் சந்தன அபிஷேகம் செய்து எலுமிச்சைமாலை அணிவித்து அர்ச்சனை செய்தால் நோய்கள் மறையும். யம பயம் நீங்கும்.

சனி தோஷம் நீங்க சனிக்கிழமைகளில் பைரவருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், சனி கிரகத்தால் ஏற்படும் அனைத்து விதமான தோஷங்களும் விலகும்.

தொடர்புடைய செய்திகள்

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்