சித்தர்கள் ஒவ்வொருவரும் ஒரு வகையான தனித்தன்மை வாய்ந்தவர்கள். ஆதி சித்தனாகிய சிவபெருமானுக்கு அடுத்து சித்தர்களின் தலைமைக் குருவாகவும், தமிழ் மொழிக்கு இலக்கணத்தை வகுத்ததாக கருதப்படுவருமானவர் ‘அகத்திய மாமுனி’ அப்படிப்பட்டவர்களுள் ஒருவர்.
மக்களின் நீண்ட நாள் உடல்நலக் குறைப்பாடுகளைப் போக்க ஈஸ்வரரை மையப்படுத்தி உருவாக்கிய மந்திரம்தான் இந்த அகஸ்தீஸ்வரர் மந்திரம்.
அகத்தியர் மஎதிரம்:
“ஓம் அகத்தீஸ்வராய நமஹ”
என்ற இந்த மந்திரத்தை விடியற்காலையில் எழுந்து குளித்து முடித்து சூரியன் உதிக்கின்ற நேரத்தில் 21 முறை ஜெபிக்க வேண்டும். ஞாயிற்றுக் கிழமைகளில் 108 முறை ஜெபித்தால் சிறப்பாகும்.