Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள் என்று தெரிந்துக்கொள்வோம் !!

Advertiesment
ஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள் என்று தெரிந்துக்கொள்வோம் !!
நெற்றியில் மச்சம் இருந்தால் பலசாலி, சுயநலவாதி, கஞ்சன், கருணை இல்லாதவன். புருவத்தில் மச்சம் இருந்தால் சிறப்பான வளர்ச்சி, நல்ல மனைவி, நல்ல  குழந்தை.

காதில் மச்சம் இருந்தால் நல்ல மதிப்பு, புகழ் விருத்தி, சாதனையாளர், மூக்கில் மச்சம் இருந்தால் சகலத்திலும் வெற்றி. உயர்வு.
 
உதட்டில் மச்சம் இருந்தால் கலைத்துவம். உயரிய அந்தஸ்து, சரஸ்வதி கடாச்சம். பலர் பாராட்டு. நாக்கில் மச்சம் இருந்தால் பொய்யர், வாக்கு பலிதம்.
 
தாடையில் மச்சம் இருந்தால் நல்லகுணம். உயரிய அந்தஸ்து. இரு கன்னத்தில் மச்சம் இருந்தால் பண பிரச்சனை இல்லை, செல்வந்தர்.
 
கழுத்தில் மச்சம் இருந்தால் நல்ல சகோதரன் மற்றும் விசுவாசி உண்டு. மார்பில் மச்சம் இருந்தால் சகலசம்பது, பெண்கள் மூலம் தாம்பத்ய சுகம், மகிழ்ச்சி.
 
உள்ளங்கையில் மச்சம் இருந்தால் தாம்பத்யத்தில் அதிருப்தி. முதுகில் மச்சம் இருந்தால் அதிர்ஸ்டம்.
 
வயிற்றில் மச்சம் இருந்தால் உணவு பஞ்சமில்லை. தொப்புளில் மச்சம் இருந்தால் உணவு பஞ்சமில்லை, சந்ததி விருத்தி. சிறந்த சமயல்காரர்.
 
வலது தொடையில் மச்சம் இருந்தால் மனைவி குடும்பத்தின் மூலம் உதவி, உத்யோகதில் உள்ள மனைவி. இடது தொடையில் மச்சம் இருந்தால் மனைவி குழந்தை மூலம் செலவு, அவஸ்தை.
 
வலது முழங்காலில் மச்சம் இருந்தால் ஆக்கபூர்வமான வெற்றியாளர். இடது முழங்காலில் மச்சம் இருந்தால் மனைவி, பெண்களால் தொல்லை.
 
பாதத்தில் மச்சம் இருந்தால் கடின ஊழைப்பாளி. ஆச்சர அனுஸ்டானம் உள்ளவவன். பாதத்தின் அடியில் மச்சம் இருந்தால் கஸ்டம் நஸ்டம், குற்றம் குறை. ஏற்றம்  இல்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒவ்வொரு ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்களும் பலன்களும் !!