Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூரிய சந்திர ஓரைகளை பற்றி தெரிக்கொள்வோம் !!

Advertiesment
சூரிய சந்திர ஓரைகளை பற்றி தெரிக்கொள்வோம் !!
குரு, சுக்கிரன், சந்திரன், புதன் நல்ல ஹோரைகள் மற்ற சூரியன், செவ்வாய், சனி நல்ல ஹோரைகள் அல்ல. ஒவ்வொரு ஓரையிலும் என்ன நல்ல காரியங்கள் செய்யலாம் என்று பார்ப்போம்.

சூரிய ஓரை:
 
சுபகாரியங்கள் செய்ய மற்றும் புதிதாக எந்த அலுவல்களையோ செயல்களை இந்த சூரியன் ஓரை ஏற்றதல்ல. ஆனால் இந்த ஓரையில் உயில் சாசனம் எழுத,  பெரியோர்கள் ஆசிபெற, மற்றவரின் சிபாரிசு பெற, மற்றவர்களிடம் ஆலோசனை பெற, அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள், வழக்கு தொடர்பான விஷங்களை  மேற்கொள்ள சிறப்பானதாக இருக்கும். 
 
இந்த ஓரை நடக்கும் நேரத்தில் பொருள் ஏதேனும் காணாமல் போனால் கிடைப்பது அரிது. அப்படிக் கிடைக்குமானால் மிகவும் தாமதித்து அப்பொருளின் நினைவு  மறைந்தபின் கிழக்கு திசையில் கிடைக்கலாம்.
 
சந்திர ஓரை:
 
சந்திர ஓரை காலத்தில் எல்லா சுபகாரியங்களையும் செய்யலாம். குறிப்பாகப் பெண்கள் தொடர்புகொண்ட சுப விசேஷங்கள் மிகவும் ஏற்ற காலம் இது. இந்த ஓரைகளில் புதிய தொழில் தொடங்க, வர்த்தகம் தொடங்க, வியாபார விஷயமாகவோ பிரயாணம் மேற்கொள்ளலாம். 
 
ஆன்மீக யாத்திரை செய்யலாம், பெண் பார்ப்பது மற்றும் திருமணம் விழாக்கள், சீமந்தம், மொட்டையடிப்பது, காது குத்துதல், வெளிநாடு செல்ல, பதவி ஏற்பது, பேச்சுவார்த்தை  செய்யலாம், வேலை விண்ணப்பிப்பது, சேமிப்பு துவங்குதல் ஆகியவற்றை மேற்கொள்ளலாம். அதிலும் வளர்பிறை காலத்தில் சந்திரன் ஓரையும்  மிகவும் நல்ல நேரமாகக் கருதப்படுகிறது. இந்த ஓரையில் எந்தப்பொருள் காணாமல் போனாலும் கிடைக்காது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எந்த நாளில் சத்யநாராயண பூஜை செய்ய உகந்தது....?