Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விளக்கேற்ற உகந்த திரிகளும்; தீபம் ஏற்றுவதால் உண்டாகும் பலன்களும்..!!

விளக்கேற்ற உகந்த திரிகளும்; தீபம் ஏற்றுவதால் உண்டாகும் பலன்களும்..!!
தாமரைத் தண்டுத் திரி - முன்வினைப் பாவம் நீக்கும். செல்வம் தரும். முற்பிறவியின் பாவங்களை அகற்றி, செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் தாமரைத் தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.
பஞ்சு திரி - வீட்டில் மங்களம் நிலைக்கும். சுகங்களைக் கூட்டும் தன்மை கொண்டதுதான் பஞ்சுத்திரி.
 
வாழைத் தண்டுத் திரி - மனச் சாந்தி தரும் புத்திரபேறு உண்டாகும். மழலைப் பேறில்லையே என ஏங்குவோர் வாழைத்தண்டு திரி போட்டு  விளக்கேற்ற வேண்டும்.
 
வெள்ளெருக்கம் திரி - செய்வினைகள் நீங்கவும், நீடித்த ஆயுள் பெறவும் வெள்ளெருக்குப் பட்டைத் திரியில் விளக்கேற்ற வேண்டும். முழுமுதற் கடவுளான கணேசப் பெருமானுக்கும் உகந்தது இது.
 
நாம் அன்றாடம் காலையும் - மாலையும் பூசை அறையில் தீபம் ஏற்றி ஆண்டவனை வணங்குகிறோம். தினம் தீபம் ஏற்றும் நம்மில் எத்தனை  பேருக்குத் தீபம் ஏற்ற வேண்டிய முறைகள் பற்றியும், அவை தரும் பலன்கள் பற்றியும் பார்ப்போம்.
webdunia
தீபம் ஏற்றும்போது கிழக்குத் திசையில் உள்ள முகத்தை மட்டுமே ஏற்றினால் நம்மைத் தொடரும் துன்பங்கள் நீங்குவதுடன் மக்களிடையே நன்மதிப்பும் கிடைக்கும்.
 
மேற்குத் திசையில் உள்ள முகத்தை மட்டும் ஏற்றினால் சகோதரர்களிடையே ஒற்றுமை ஏற்படும்; கடன் தொல்லைகள் விலகும்.
 
சர்வ மங்களமும், பெரும் செல்வமும் வேண்டுவோர் வட திசையில் உள்ள முகத்தை ஏற்ற வேண்டும்.
 
தென் திசையில் உள்ள முகத்தை ஒருபோதும் ஏற்றக்கூடாது. எதிர்பாராத தொல்லைகளும், கடன்களும் பாவங்களும் கூடும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தெய்வ சக்தியை ஈர்க்கும் ஆற்றல் கொண்ட ஸ்வஸ்திக்!!