வீட்டில் வெள்ளி மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு தினங்களும் வீட்டை சுத்தம் செய்து வழிபாடு செய்து வந்தால் வீட்டில் செல்வ செழிப்பு உண்டாகும். மேலும் வீட்டில் நிம்மதி மற்றும் ஒற்றுமை உண்டாகும்.
ருத்ராட்சம், அருட் பிரசாதம், எலுமிச்சை பழம், மஞ்சள் காப்பு, குங்குமம் ஆகியன வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்தால் அந்த வீட்டில் நிம்மதியும், செல்வ செழிப்பும் இருக்கும்.
நாம் ஏதேனும் ஒரு புதிய தொழில் அல்லது வீடு ஆகியவற்றில் குடியேறும் போது நாம் முதலில் மகாலட்சுமியின் அம்சமான உப்பு மற்றும் அம்மனின் அம்சமான மஞ்சள், நிறைகுடம் தண்ணீர், தெய்வங்களின் படங்கள் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும்.
வீடுகளில் உள்ளே நுழையும் போதே நறுமணம் வீச வேண்டும். அதனால் தினமும் வீட்டை துடைத்து சுத்தமாக வைத்து சாம்பிராணி அல்லது ஊதுபத்தி ஏற்றி வைக்க வேண்டும்.
மேலும் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று சிறிதளவு கல் உப்பு வாங்கி வந்தால் வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.
அரசமரத்தை சனிக்கிழமை காலை 8 மணிக்குள் 108 முறை சுற்றி வந்து தீபம் ஏற்றி வழிபட்டுவந்தால் பண வரவு அதிகரிக்கும். இதை வாரந்தோறும் கடைபிடித்தால் வாழ்வில் செல்வம் மென்மேலும் பெருகும்.
பணப்பெட்டியில் ஏலக்காய், மல்லிகைப்பூ, சந்தனம், வில்வ இலை போன்றவற்றை வெள்ளிக்கிழமைகளில் வைத்து வழிபட்டு வந்தால் அஷ்டலட்சுமியின் அருள் நமக்கு கிடைக்கும்.