திருமணத்திற்கும், நிச்சயதார்த்தத்திற்கும் லக்கின நிர்ணய முகூர்த்தம்; குடமுழுக்கு மற்றும் பெருஞ்சாந்திகளுக்கு நேத்திர ஜீவனுடன் முகூர்த்தம்; குபேரன், லட்சுமி அருள்பெற வியாழன் அன்று (மாலை 5 - 8) குபேர முகூர்த்தம் என்று அந்தந்த வேளைகளை நாம் பயன்படுத்துகிறோம்.
அதுபோலவே, மனிதனை வாட்டி எடுக்கின்ற கடன் தொல்லையைத் தீர்க்க மைத்ர முகூர்த்தம் கணிக்கப்பட்டுள்ளது. வாங்கிய கடனில் சிறு தொகையை, கடன் கொடுத்தவர் கணக்கில் போட, விரைவில் கடன் முற்றிலுமாக அடைந்து விடும். தோரண கணபதியை வணங்கி விட்டு இந்த மைத்ர முகூர்த்தத்தைப் பயன்படுத்துங்கள்.
மூழ்கடிக்கக்கூடிய கடன் வெள்ளத்தையும் வற்றச் செய்யும் மைத்ர வேளையை 6 மாதங்களுக்குக் கணித்தார்கள். வாஸ்து பூஜைக்கு ராகுகாலம், எமகண்டம் ஆகியவை விதி விலக்கு என்பதுபோல இதற்கும் விதிவிலக்கு உள்ளது.
மைத்ர முகூர்த்தம்:
மேஷம்: வியாழன் காலை 9 - 10½
ரிஷபம்: வெள்ளி காலை 8 - 10½
மிதுனம்: புதன் காலை 7½ - 9
கடகம்: திங்கள் மாலை 4½ - 6
சிம்மம்: ஞாயிறு காலை 11 - 12½
கன்னி: வெள்ளி மாலை 5 - 6½
துலாம்: சனி காலை 10½ - 12½
விருச்சிகம்: வியாழன் மாலை 3 - 5½
தனுசு: செவ்வாய் 10½ - 12½
மகரம்: சனி காலை 9 - 10½
கும்பம்: திங்கள் மாலை 3 - 5½
மீனம்: வியாழன் காலை 9 - 10½ வரை.
மைத்ர நேரம் என்பதற்கு நண்பன்போல கடன் அடைய உதவும் நல்ல நேரம் என்று பொருள். பயன்படுத்திப் பலன் பெறலாம்.