Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இறைவனை ஒளி வடிவாக வழிபடுதலே சிறந்தது: வள்ளலார்

இறைவனை ஒளி வடிவாக வழிபடுதலே சிறந்தது: வள்ளலார்
தமிழ்ச் சமயத்தில் தோன்றி அளப்பரிய பங்கினை ஆற்றியவர்தான் துருவருட் போரொளி இராமலிங்க வள்ளலார். உலகம் ஏற்றுக் கொள்ளக்கூடிய உயரிய ஒரு பொதுக் கருத்து ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை என்பதாகும். 

உலக உயிர்கள் எல்லாம் ஒன்று அவ்வுயிர்களுக்கு  தொண்டு செய்ய வேண்டும் என்பதே வள்ளல் பெருமனார் வழியாகும்.
 
உலகத்தவர் அனைவரையும் சன்மார்க்க நெறியிலே திளைத்திருக்க அவதரித்தவர் வள்ளல் பெருமானார் 19 ஆம் நூர்றாண்டில் வாழ்ந்தவர். சன்மார்க்கத்தின் வழி சாதி, மதல், சமயம், ஆசாரம், போன்ற பேதங்களை ஒழித்து அனைத்து உயிர்களையும் சமமாகவும், பொது நோக்குடனும் ஒருமையுணர்வுடனும் அன்புடனும் காணுதலே ஆன்மநேய ஒருமைப்பாடாகும் என உலகுக்கு உணர்த்தியவர் வள்ளலார்.
 
வள்ளல் பெருமானார் இறைவனை வழிபடும் முறையிலும் புதுமையை புகுத்தினார். அப்புதுமை வழிபாடே சோதி வழிபாடு என்கிற ஒளி வழிபாடாகும். இறைவனைக் கருணையே வடிவமாகக் கொண்டு அருளை விளக்கமாகச் சிந்தித்து, இறைவனை ஒளி வடிவாக வழிபடுதலே சிறந்தது என வள்ளலார் கண்டார். எல்லா சமயங்களுக்கும் மார்க்கங்களுக்கும் பொதுவான வழிபாடே அருட்பெருஞ்சோதி வழிபாடாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (02-02-2019)!