Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இத்தனை சிறப்புகள் வாய்ந்ததா பங்குனி உத்திர நாள் !!

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (16:52 IST)
பங்குனி உத்திர நன்னாளில் தான், அகத்தியர் லோபமுத்திரையை திருமணம் செய்து கொண்டதாக கந்தபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தேவர்களின் தலைவனான இந்திரன்-இந்திராணி திருமணம் நடந்ததும் பங்குனி உத்திர நன்னாளில் தான்.

அது மட்டுமல்ல, நவக்கிரக மண்டலத்தில் உள்ள சந்திரன் அழகும் திறமையும் கொண்ட 27 நட்சத்திரக் கன்னியரை மணம் செய்து கொண்டதும் இந்த பங்குனி உத்திர நாளில் தான் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

இத்தனை சிறப்புகள் வாய்ந்ததால் தான் பங்குனி உத்திர நாளில் ஏராளமான சுப நிகழ்ச்சிகள் நடைப்பெறுகின்றன.

கோயில்களிலும் பங்குனி பிரம்மோற்சவம், உத்திரத் திருவிழா, தேரோட்டம் என்று தமிழ் நாடெங்கும் திருவிழாக்கள் களை கட்டத் தொடங்கி விடும். அது மட்டுமல்ல, பங்குனி உத்திரம் நட்சத்திரத்தின் மகிமையை பல்வேறு புராணங்களும் போற்றி புகழ்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments