Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வீட்டின் பூஜையறையில் சில தெய்வங்களில் படங்களை வைத்து வழிபடக் கூடாது ஏன்...?

Advertiesment
வீட்டின் பூஜையறையில் சில தெய்வங்களில் படங்களை வைத்து வழிபடக் கூடாது ஏன்...?
வீட்டின் பூஜை அறை என்பது, பிரபஞ்ச சக்தியை அந்த வீட்டுக்கு இழுத்துவரும் சக்தி நிறைந்த புனிதமான இடம். பூஜையறையை அமைத்து, அதில் சுவாமி படங்களை வைத்து வணங்குவதில், சில விதிமுறைகள் உள்ளன.
நாம் பிரார்த்தனைக்காக யாத்திரை செல்லும் இடங்களில் உள்ள படங்களை எல்லாம்  வாங்கி வந்து வழிபடக்கூடாது. தெய்வங்களில் சாத்விக தெய்வங்கள்,  உக்கிர தெய்வங்கள் என இரண்டு வகைகள் உள்ளன. சாத்விக தெய்வங்களை வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபடுவது நல்லது. முருகன், விநாயகர்,  லட்சுமி, சரஸ்வதி போன்ற படங்களை வைத்து வழிபடலாம். அவரவர்களின் குலதெய்வ படத்தை கண்டிப்பாக வைத்து வழிபட வேண்டும்.
 
அவரவர்களுக்கு உரிய  இஷ்ட தெய்வத்தின் படத்தை வாங்கி வந்து வைத்து வழிபடுவது என்பது, நமது பிரார்த்தனையிலும், நமது வைராக்கியத்திலும், லட்சியத்திலும் துணை நிற்கும். சிவலிங்கம், காளி, ஆஞ்சநேயர், ஐயப்பன், மற்றும் துர்கை போன்ற தெய்வங்களின் படங்களை வீட்டின் பூஜையறையில், வைத்து  வழிபடலாமா? என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது.
webdunia
உக்கிர தெய்வங்களான காளி, பிரத்யங்கிரா தேவி, துர்கை, ஆஞ்சநேயர், ஐயப்பன் ஆகியோர் படங்களை வீட்டில் வைத்து வழிபடுவதைத் தவிர்ப்பது நல்லது. அதற்குக் காரணம் என்னவென்றால், அவைகளுக்கு உரிய பூஜை மற்றும் அனுஷ்டான முறைகளில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். 
 
பூஜை அறையில் சுவாமி படங்களுடன், பித்ருக்களின் படங்களை வைத்து வணங்கக்கூடாது. அவர்களது படங்களை, வீட்டில் வரவேற்பு அறை அல்லது படிக்கும்  அறையில் வைத்து வணங்குவதே நல்லது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிடித்துவைத்தால் பிள்ளையார் என்று கூறப்படுவதற்கான காரணம் என்ன...!