Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காசியில் ஆட்சி செய்யும் காவல் தெய்வமான கால பைரவர்....!

காசியில் ஆட்சி செய்யும் காவல் தெய்வமான கால பைரவர்....!
காசியில் உள்ள கால பைரவர் சன்னதி பிரசித்தி பெற்றது. காசிக்குத் சென்றவர்கள் இரவு கால பைரவ பூஜை பார்க்காமல் திரும்புவதில்லை. கால பைரவர் காசி நகரத்தின் சேனாதிபதி. காசியில் இறந்தவர்களுக்கு யமபயம் கிடையாது. 
தண்டனை கொடுக்க யமனுக்கு அதிகாரமும் கிடையாது. காலனின் அதிகாரம் பைரவர்களுக்குக் கிடைத்தால் கால பைரவர் என்று  அழைக்கப்படுகிறார்.
 
பிரம்மாவின் சிரசு கபாலமாக மாறி, பிரமஹத்தி தோஷத்திற்கு பைரவர் சக்தி ஆளாகி முடிவில் காசி மாநகர எல்லையில் கால் வைத்தபோது சிவபெருமான் காட்சி தந்து பிரமஹத்தி தோஷத்தை நீக்கி காசிமாநகர காவல் தெய்வமாக எழுந்தருள அருள்புரிந்தார். இன்றும் காசி மாநகரம்  பைரவர் ஆட்சி செய்யும் இடமாக உள்ளது. காசிமாநகர எல்லையில் எட்டு திக்கிலும் அஷ்ட பைரவர்கள் எழுந்தருளி எல்லையை  பாதுகாக்கின்றனர்.
 
காசி அனுமன் காட்டில் உருபைரவர் ரிஷப வாகனத்தில் தென்கிழக்கு மூலையிலும்,ஸ்ரீதுர்க்கை கோவிலில் சண்ட பைரவர் மயில் வாகனத்தில்  தெற்கு மூலையிலும், விருத காலர் கோவிலில் அன்ன வாகனத்தில் கிழக்கு மூலையில் அசி தாங்க பைரவரும், லாட் பஜாரில் கபால பைரவர்  யானை வாகனத்தில் வடமேற்கு திசையிலும், ஸ்ரீகாமாட்சி ஆலயத்தில் கருட வாகனத்தில் குரோதன பைரவர் தென்மேற்கு திசையிலும்,  பீமசண்டியில் குதிரை வாகனத்தில் உன்மத்த பைரவர் மேற்கு திசையிலும், திரிலோசன சங்கமத்தில் வடகிழக்கு திசையில் சம்ஹார பைரவர் நாய் வாகனத்திலும், பூத பைரவரத்தில் சிங்க வாகனத்தில் வடக்கு திசையில் பீஷண பைரவர் ஆகிய அஷ்ட பைரவரும் அஷ்ட திக்கிலும்  எழுந்தருளி ஆட்சி செய்கின்றார்கள்.
 
அதனால்தான் காசி மாநகர எல்லையை விட்டு வெளியேறுகின்ற ஒவ்வொரு பொருளும் காசி கால பைரவர் முன் அனுமதி பெற்றே வெளிவர வேண்டும். அதேசமயம் காசியில் யாராவது இறந்தால் யமவர்த் தனை கிடையாது. பைரவ வாதணை நிச்சயம் உண்டு. காசி மாநகர  எல்லையை தொடும்போது எமனும் திரும்பி போவார் என்பது ஐதீகம். அதனால்தான் என்னவோ காசி பைரவர் மஹா பைரவர் சன்னதிக்கு தனி  சக்தி உள்ளது. காசி கறுப்பு கயிறு எமபயம் நீங்கி வாழ வைக்கின்றது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எல்லா வகையான கண் திருஷ்டிகளையும் விரட்ட மந்திரம் இருக்கா...?