Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கந்தர் சஷ்டி கவசத்தைச் சொல்லுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா...?

கந்தர் சஷ்டி கவசத்தைச் சொல்லுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா...?
கந்தர் சஷ்டி கவசம் சொல்லும் போது நம் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வோரு வேல் காக்குமாறு பிரார்த்திக்கிறோம். உதாரணமாக ஒரு சில வரிகளைப் பார்ப்போம்.

கந்தர் சஷ்டி கவசம்:
 
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க‌!
விதிச்செவி இரண்டும் வேலவர் காக்க‌!
நாசிகளிரண்டும் நல்வேல் காக்க‌!
பேசிய வாய் தனைப் பெருவேல் காக்க‌!
 
இப்படி தினசரி நாம் வாயால் ஒவ்வொரு அவயவங்களைப் பற்றி சொல்லும் போது நமது மனது அந்த அங்கத்தில் நிலை கொள்கிறது. மனது  தியானிக்கும் அங்கத்தினை நமது மூளை தானாகவே ஒருசில வினாடிகள் கூர்ந்து கவனிக்கிறது.
 
இப்படி மூளையின் தனி கவனத்திற்கு வரும் போது அந்த பாகத்திற்குரிய மூளையின் செயல்பாடுகள் சிறப்படைகிறது. இப்படி தினசரி மிகவும்  அமைதியான மனநிலையில் நாள் இருமுறை நம் உடல் பாகத்தினை மூளையின் கவனத்திற்க்கு கொண்டு வந்தால் உடலின் சிறு சிறு  குறைபாடுகளை மூளை தாமாகவே சரி செய்து கொள்ள தூண்டுதலாக அமையும்.
 
மனோ வைத்திய ரீதியாக உடல் நோய்களைப் போக்க முடியும். இந்த மனோ வைத்திய முறை நம் வாழ்க்கை முறையாகவும் இருக்கிறது  என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
 
கந்தர் சஷ்டியை தினசரி சொல்லும் போது நம் உடல் முழுவதும் மூளை செயல்பாடு அதிகரிப்பதால் இது ஒரு பாதுகாப்பு கவசமாக  இருப்பதாலேயே இதை “கந்தர் சஷ்டி கவசம்” என்று கூறினார்கள்.
 
இந்த கவசத்தில் வரும் வரிகளில் நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும் என்று ஒரு வரி உண்டு. வார்த்தைகளால் சொல்லும்  மந்திரத்தினால் நவ கோள்கள் எப்படி நன்மை செய்யும் என்றும் தோன்றலாம். நவ கிரகங்களின் மாறுதல்களால் பூமியின் மீதே பாதிப்பு  ஏற்படும் போது மனித உடலில் பாதிப்பு ஏற்படாதா என்ன?.
 
கிரகங்களின் மாற்றத்தால் நமது உடலில் ரத்த ஓட்டம் மற்றும் வாத பித்த பாதிப்புகள் ஏற்படுகிறது. உடலில் ஏற்படும் எந்த ஒரு வியாதிக்கும் இவற்றில் ஏற்படும் மாற்றமே அடிப்படை.
 
ஆனால் கவசம் படிப்பதன் மூலமாக தினசரி மூளை நமது உடலை உற்று நோக்கி தானே தன்னைச் ச‌ரிசெய்யும் வேலையை செய்து கொண்டே இருப்பதால் நவ கோள்களால் ஏற்படும் உடல் மாறுபாடு கூட பாதிப்பை ஏற்படுத்தாது என்பதே இதன் சாரம். அதையே நவகோள்கள்  கூட மகிழ்ந்து நன்மை அளிப்பதாக கூறினார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (18-02-2019)!