Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரதோஷ நேரத்தில் பூஜை செய்ய உகந்த பொருட்களும் மந்திரங்களும் !!

Advertiesment
பிரதோஷ நேரத்தில் பூஜை செய்ய உகந்த பொருட்களும் மந்திரங்களும் !!
பிரதோஷ வேளையில் நந்தியம்பெருமானுக்கு அருகம்புல் அல்லது வில்வ மாலை சாற்றி, நெய் விளக்கு ஏற்றி பச்சரிசி, வெல்லம் வைத்து பூஜை செய்யலாம். 

பிரதோஷ நேரத்தில் நமசிவாய மந்திரம் ஜெபிப்பதால், நமது முன்னோர்கள், ஏழு தலைமுறையினர் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும்.
 
பிரதோஷ காலத்தில் சக்தியோடும், முருகப்பெருமானோடும் இணைந்த சோமாஸ்கந்த மூர்த்தியை தரிசித்தால் குடும்ப உறவுகள் மேம்படும். இந்த நேரத்தில் நடராஜ மூர்த்தியை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றத்தைக் காணலாம்.
 
பிரதோஷம் சிவ பூஜைக்கு உகந்தது. வளர்பிறை, தேய்பிறைகளில் வரும் திரயோதசியில் சந்தியா வேளையில் அனுசரிக்கப்படுவது. சிவன் நந்தியின் கொம்புகளில் நின்று ஆடும் அழகிய தாண்டவத்தின் வேளையது.
 
தேவரும், கடவுளரும், முனிவர்களும் கூடி நின்று சிவனாரின் தாண்டவத்தை கண்டு பக்தி பரவசப்படும் நேரமது. பிரதோஷ வேளையின் மஹிமையை அறிந்தவர்கள் சிவனின் அளவில்லா கருணைக்கு பாத்திரமாக இந்த வேளையில் விரதமிருந்து, சிவனுக்கு பூஜை செய்கிறார்கள்.
 
தோஷம் என்றால் குற்றம். என்றால் பொறுத்துக்கொள்வது. இறைவன் நமது பாவத்தை எல்லாம் மன்னித்து அருள் தரும் காலமே பிரதோஷம். இந்த நேரத்தில் இறைவனை வழிபட்டால் மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும்.
 
பிரதோஷ வேளையில் உச்சரிக்க வேண்டிய பஞ்சாக்ஷர மந்திரம்! - “ஓம் நம சிவாய”.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதோஷத்தன்று சிவ தரிசனம் செய்வதால் என்ன பலன்கள்....?