Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வீட்டில் துர் சக்திகள் உள்ளதா என்பதை எவ்வாறு தெரிந்துக்கொள்வது...?

Advertiesment
வீட்டில் துர் சக்திகள் உள்ளதா என்பதை எவ்வாறு தெரிந்துக்கொள்வது...?
நீரில் தோன்றி, நீரிலேயே கரைந்து போகும் உப்பு நம் ஆத்மாவை போன்றது. கடலில் நீராடுவது சகல தோஷங்களையும் நீக்கும் என்பது  நம்பிக்கை. இன்றும் திருஷ்டி கழிக்க, உப்பு சுற்றிப்போடுவது நடைமுறையில் உள்ள ஒரு வழக்கமாகும். 
ஒரு டம்ளர் நீரில் ஒரு சிட்டிகையளவு உப்பு சேர்த்து அதை வீட்டின் தென்மேற்கு மூலையில் வைத்து விடவேண்டும். இது வீட்டில் இருந்து ஏழ்மை விலக செய்யும். மேலும் தீய சக்திகளும் விலகும்.
 
உள்ளங்கையளவு உப்பு எடுத்து அதை ஒரு கிண்ணத்தில் போட்டு அதை குளியலறையின் ஒரு மூலையில் வைத்துவிடவும். இந்த உப்பை சீரான இடைவேளையில் நீங்கள் மாற்ற தவறக் கூடாது. இது வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்தி குறைந்து, ஏழ்மை நீங்க உதவுமாம்.
 
சிவப்பு துணியில் உப்பு சேர்த்து கட்டி வைக்கவும். அதை வீட்டின் நுழைவாயில் பகுதியில் கட்டி தொங்கவிடவும்.இது வீட்டுக்குள் இருக்கும்  கெட்ட சக்தி நீங்கவும், நல்ல அதிர்வுகள் நிறையவும் உதவும்.
 
சாப்பிடும் இடத்தில் உப்பு வைப்பது செல்வசெழிப்பு அதிகரிக்க உதவும். வீட்டில் செல்வம் நிறைந்து இருக்க உதவும்.
 
குளிக்கும் டப்பில் ஒரு கைப்பிடி கல் உப்பு சேர்த்து 20 நிமிடங்கள் குளிப்பதால், நீங்களே கெட்ட சக்திகள் நீங்குவதை உணர முடியும்.
 
வெள்ளிக்கிழமை வீட்டில் உப்பு வாங்கி வைத்தால் செல்வம் சேரும் என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள்.அதாவது வெள்ளிக்கிழமையன்று  உப்பு வாங்கினால் பணம், சொத்துக்கள் உள்ளிட்ட செல்வங்கள் சேரும் என்று அர்த்தமாகும். உப்பு கெட்ட சக்திகளை நம்மிடமிருந்து விரட்டி,  கெட்ட அதிர்வுகளை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருமணம் கைகூட செய்யவேண்டிய பரிகார முறைகள்...!