Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொங்கல் பண்டிகை எத்தனை நாட்கள் கொண்டாடப்படுகிறது ஏன்...?

பொங்கல் பண்டிகை எத்தனை நாட்கள் கொண்டாடப்படுகிறது ஏன்...?
பொங்கல் பண்டிகை நான்கு நாள் பண்டிகையாகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பண்டிகை கொண்டாடப்படுகிறது. முதல் நாளான போகிப்பொங்கல், குடும்பத்திற்கானது. இரண்டாம் நாளான சூரியப் பொங்கல் சூரிய பகவானை வழிபடுவதற்கான  நாளாகும். 
மூன்றாம் நாளான மாட்டுப் பொங்கல், மாடுகளை வழிபடுவதற்கான நாளாகும். இந்த நாளில் மாடுகளை குளிப்பாட்டி,  கொம்புகளுக்கு  அடர்த்தியான வர்ணம் பூசி அதன் கழுத்தை சுற்றி மாலையிடப்படும். கடவுளுக்கு படைத்த பின், அந்த பொங்கல்  கால்நடை  விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் உண்ணுவதற்கு வழங்கப்படும். 
 
போகி
 
போகி பண்டிகை என்பது பழையன கழித்தல் என்பதாக அடையளம் கொண்டு வேளாண்மையை மேற் கொண்டவர்களால்  கொண்டாடப்படும்  விழாவாகும். போகி பண்டிகை என்பது ‘மார்கழி’ மாதத்தின் இறுதி நாளாகும். பழையன கழிந்து புதியது  புகும் நாளாக இது  கொண்டாடப்படுகிறது. பழைய பொருட்களை இந்நாளில் எரித்து விடுகிறோம். ஒரு பண்டிகையாக,  கொண்டாட்டமாக இதைச் செய்கிறோம்.
 
மார்கழி கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கம். ஆயர்கள்  இந்திரவிழாவை முடித்து சூரிய வழிபாடை தொடர்ந்தனர். அக்காலத்தில் போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும்  பழக்கம் இருந்தது. அப்போது  அழுவது எதனால், என்பதனை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள், அந்நாளைப் புத்தர் இறந்த  தினமென்று கண்டறிந்துள்ளனர்.
 
தைப்பொங்கல்
 
பொங்கல் என்பது தென்னிந்திய மக்களின் பழமை வாய்ந்த தமிழர்களின் பண்டிகையாகும். தைப்பொங்கல் என்பது தமிழர்களால்  சிறப்பாகக்  கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். தமிழர் திருநாளாக தமிழர்களாலும், தமிழர் வாழும் அனைத்து  நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.  பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றி தெரிவிக்க  கொண்டாடப்படுகிறது.
 
பொங்கல் தினத்தன்று நெற்கதிர்களை அறுப்பதற்கு முன்பு கடவுளுக்கு விசேஷ பூஜை நடத்தப்படும். தங்களின் ஏர் கலப்பை  மற்றும் நெல்  அறுக்கும் அரிவாள்கள், சந்தன குப்பி ஆகியவற்றை வைத்து சூரியனையும், பூமியையும் விவசாயிகள்  வணங்கிடுவார்கள். கடவுள் முன்  வணங்கப்பட்ட கருவிகளை கொண்டு தான் நெற்கதிர்களை அறுவடை செய்வார்கள்.
 
மாட்டுப் பொங்கல்
 
பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். இந்நாளில் வயலை உழவும், வண்டி இழுக்கவும், பால், தயிர், நெய்  கொடுக்கவும், காரணமாக  இருக்கும் எருதுகளையும், பசுக்களையும், கன்றுகளையும் குளங்களில் குளிப்பாட்டி, குங்குமம்,  சந்தனம், மலர் மாலைகளால் அலங்கரித்து  குடிக்கக் பச்சையரிசிக் கஞ்சி கொடுப்பர். உழவனுக்கு துணையாக இருந்த  கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாளே மாட்டுப் பொங்கலாகக்  கொண்டாடப் படுகிறது. இந்த விழா பட்டிப் பொங்கல்  என்றும் அழைக்கப்படும். இந்த நாளில் மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு  அடர்த்தியான வர்ணம் பூசி அதன் கழுத்தை  சுற்றி மாலையிடப்படும். கடவுளுக்கு படைத்த பின், அந்த பொங்கல் கால்நடை  விலங்குகளுக்கும், பறவைகளுக்கும்  உண்ணுவதற்கு வழங்கப்படும்.
 
காணும் பொங்கல்
 
காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் என்றும் அழைப்பர். உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி  பெறுதல்  என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், நடத்துவதுண்டு, குறிப்பாக ஜல்லிக்கட்டு, பட்டி மன்றம், உரி  அடித்தல், வழுக்கு மரம்  ஏறல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும்.
 
இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில்  முகத்தில் பூசிக்கொள்வார்கள்
 
இவ்வாறு நான்கு நாள் பண்டிகையாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. முதல் நாளான போகிப்பொங்கல், குடும்பத்திற்கானது.  இரண்டாம் நாளான சூரியப் பொங்கல் சூரிய பகவானை வழிபடுவதற்கான நாளாகும். மூன்றாம் நாளான  மாட்டுப் பொங்கல், மாடுகளை  வழிபடுவதற்கான நாளாகும். நான்காம் நாளான காணும் பொங்கல் அன்று வெளியிடங்களுக்கும், உறவினர்கள் இல்லங்களுக்கும் சென்று  வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சகலவித எதிர்மறை சக்திகளை விரட்டும் எருக்கம் பூ...!