Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை வெளியேற்ற சில பரிகாரங்கள் !!

Advertiesment
வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை வெளியேற்ற சில பரிகாரங்கள் !!
நம்முடைய வீட்டில் பொதுவாகவே வெள்ளிக்கிழமை செவ்வாய் கிழமை அன்று வீடு முழுவதும் வாசனையாக இருக்க, வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் வெளியேற்றப்பட சாம்பிராணி தூபம் போடவேண்டும். 

குறிப்பாக அமாவாசை தினத்தன்று நம்முடைய வீட்டில் தலைதூக்கும் கெட்ட சக்திகளை வெளியேற்ற வேண்டும் என்றால் வெள்ளருக்கன் வேரின் தூபம் போடவேண்டும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
 
வெள்ளெருக்கு வேரினை எடுத்து காயவைத்து பொடிசெய்து தயாரிக்கப்படுவது தான் வெள்ளெருக்கன் வேர் பொடி. இவை நாட்டு மருந்து கடைகளில் இருந்து வாங்கி  வைத்துக்கொள்ள வேண்டும்.
 
எப்போதும் போல உங்களுடைய வீட்டில் நெருப்பு மூட்டி, அதில் சாம்பிராணி புகையை போட்டு, அதன் மேலே கொஞ்சமாக இந்த வெள்ளெருக்கன் வேர்  பொடியையும் தூவி விட்டு விடவேண்டும். இந்த புகையை உங்கள் வீடு முழுவதும் எல்லா இடங்களிலும் காட்டுங்கள். இந்த வெள்ளெருக்கன் வேர் புகை வீடு  முழுவதும் பரவும் போது மூலைமுடுக்குகளில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல் கூட விலகிவிடும்.
 
பித்ருகாரகன் என்று சொல்லப்படும் வெள்ளெருக்கன் வேர் புகையின் வாசத்திற்கு, நம்முடைய வீட்டிற்குள் நம்முடைய முன்னோர்கள் சந்தோஷமாக வருவார்கள்.  வெள்ளெருக்கன் வேரின் மகிமை பித்ருக்களுக்கு மட்டுமல்ல. குலதெய்வம் நம்முடைய வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தால், வீட்டிற்குள் வருவதற்கு ஏதாவது  தடை இருந்தால் அந்தத் தடையைத் தகர்க்க கூடிய சக்தியும் இந்த வெள்ளருக்கன் வேருக்கு உண்டு என்று சொல்லப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (09-07-2021)!