Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யோகம் தரும் குருப்பெயர்ச்சி 2024 சிறப்பு பலன்கள்! – தனுசு!

Advertiesment
GuruPeyarchi 2024

Prasanth Karthick

, சனி, 27 ஏப்ரல் 2024 (08:34 IST)
எதிலும் நேர்மையுடனும் விடாமுயற்சியுடனும் செயல்பட்டு முன்னுதாரணமாக வாழும் தனுசு ராசி அன்பர்களே நீங்கள் அனைத்து பிரச்சனைகளையும்  உங்கள் வாக்கு சாதுர்யத்தால் சமாளீப்பீர்கள். ஆனால் எந்தக் காரியத்தையும் தள்ளிப் போடுதல் கூடாது என்பதனை கவனித்துக் கொள்ள வேண்டும்.


 
இந்த குருப் பெயர்ச்சியில் குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். உங்களின் சுய முயற்சியினால் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். அதிக வேகமில்லாமல் நிதானமாகவும், பொறுப்புடனும் காரியமாற்றுவீர்கள். உங்களின் புத்திசாலித்தனம் அதிகரிக்கும். தெய்வ வழிபாடுகளில் மனம் ஈடுபடும். வீண் அபவாதங்களிலிருந்து விடுபடுவீர்கள்.  சிலருக்கு வீடு மாற்றம், இடமாற்றம் ஆகியவை நடக்கும். உங்களின் இரக்க குணத்தால் மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள்.

அதேநேரம் சிலருக்கு முழங்கால் வலி, மூட்டு வலி ஆகியவை ஏற்படலாம். குடும்பத்தில் சிறிது மருத்துவச் செலவுகள் செய்ய நேரிடும். அதோடு சில நேரங்களில் உங்களின் உடல் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காமல் போகலாம். பெரியோர்களின் கோபத்திற்கும் ஆளாக நேரிடலாம்.

மற்றபடி குடும்பத்தில் அமைதி நிலவும்,. தாயார் வழி உறவுகள் சீராகும். உங்களுக்கு எதிராக கலகம் செய்தவர்கள் அடங்குவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண வரவு உண்டாகும். புதியவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்து அவர்களின் ஆதரவையும், அன்பையும் பெறுவீர்கள்.

ஜுலை மாதத்திலிருந்து ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் உங்களின் செயல்களில் விவேகம் அதிகரிக்கும்.

அரசாங்கத்திடமிருந்து பாராட்டும் வெகுமதியும் கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு தலைமைப் பொறுப்புகள் கிடைக்கும். முக்கியமான பூஜைகள், ஹோமங்களை இல்லத்தில் நடத்துவீர்கள். அசையாச் சொத்துகளால் வருமானம் வரத் தொடங்கும். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும்.

உங்களின் முகத்தில் வசீகரம் உண்டாகும். பிறரைக் கவரும் வகையில் பேச்சுத் திறமை அதிகரிக்கும். குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். கல்வி, கேள்விகளில் அரிய சாதனைகளைச் செய்யும் ஆற்றலைப் பெறுவீர்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களுக்கு தக்க அறிவுகளை வழங்கி அவர்களை உங்களுக்கு ஆதரவாக்கிக் கொள்வீர்கள்.

உத்யோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரித்தாலும் சக ஊழியர்களின் உதவியால் வேலைகளைக் குறித்த காலத்திற்குள் முடித்துவிடுவீர்கள். மேலதிகாரிகள் உங்களின் கோரிக்கைகளை உணர்வு பூர்வமாக பரிசீலித்து உங்களுக்கு சாதகமான முடிவுகளை எடுப்பார்கள். இந்த குருப் பெயர்ச்சியில் பணியிட மாற்றம் கிடைக்க வாய்ப்பில்லை.

வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். லாபம் பெருகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பைப் பெற்று செயல்பட்டால் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். கொள்முதலில் நல்ல லாபம் கிடைக்கும். குறிப்பாக கால்நடைகளை வைத்திருப்போர் எதிர்பார்த்த வருமானத்தைப் பெறுவீர்கள்.

நீர்ப்பாசன வசதிகளுக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறாது.  எனவே இத்தகைய முயற்சிகளைத் தவிர்த்து பழைய கடன்களைத் திருப்பிச்செலுத்தவும்.

அரசியல்வாதிகள் அனைவரையும் அனுசரித்து நடந்துகொள்ளவும். கட்சி மேலிடத்திடம் உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். அரசு அதிகாரிகளால் உங்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். எதிரிகளை இனம்கண்டு ஒதுக்குவீர்கள்.

கலைத்துறையினரின் முயற்சிகள் வெற்றி பெறும். அதனால் புகழைத் தக்க வைத்துக்கொள்வீர்கள். உங்கள் படைப்புகளை புதிய வடிவத்தில் தருவீர்கள்.

சக கலைஞர்களுடன் நட்புடன் நடந்துகொண்டு புதிய ஒப்பந்தங்களைப் பெறவும். ரசிகர்களின் ஆதரவுடன் இனிய அனுபவம் தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

பெண்மணிகள் கணவருடன் விட்டுக்கொடுத்துப் பழகுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிறையும். உடல் ஆரோக்யம் சீராக இருக்கும். ஆன்மிக சுற்றுலா சென்று வருவீர்கள். பிறரிடம் பேசும் நேரத்தில் நிதானம் தேவை.

webdunia

 
மாணவமணிகள் கல்வியில் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவுடன் வெளிவிளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றியடைவீர்கள். ஆசிரியர்களின் ஆதரவும் நன்றாக இருக்கும். அதேநேரம் புதிய நண்பர்களை அதிகம் நம்ப வேண்டாம்.

மூலம்:
இந்த குருப் பெயர்ச்சியில் உடன்பணி செய்வோர், மேலதிகாரிகள்  ஆகியோரிடம் மிகுந்த நல்ல பெயர் ஏற்படும். சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக  இருப்பார்கள்.

பூராடம்:
இந்த குருப் பெயர்ச்சியில் வேலை இல்லாமல் தவித்தவர்களுக்கு தகுந்த சம்பளத்துடன் சிறந்த வேலை கிடைக்கும். தொழில் செய்வோருக்கு கடந்த காலத்தை விட  வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். லாபம் கூடும்.

உத்திராடம்:
இந்த குருப் பெயர்ச்சியில் புதிய தொழிலால் அனுகூலம் ஏற்படும். எதிரிகளால் இருந்து வந்த தொந்தரவு நீங்கும்.  நீங்கள் தொழிலில் அதிக அக்கறை காட்ட வேண்டியிருக்கும்.

பரிகாரம் : வியாழன்தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று ஸ்ரீகுருபகவானை வணங்கி வரவும். தினமும் முன்னோர்களை வணங்கவும். தினசரி காலை சிவபுராணம் படிக்கவும். வியாழகிழமைதோறும் வினாயகருக்கு அருகம்புல்லை அணிவித்து  வழிபட்டு வர உங்கள் பொருளாதார நிலைமை படிப்படியாக  மூன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு
அதிர்ஷ்ட கல்: மஞ்சள் புஷ்பராகம்
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: ஸ்ரீசிவன், ஸ்ரீகிருஷ்ணர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யோகம் தரும் குருப்பெயர்ச்சி 2024 சிறப்பு பலன்கள்! – விருச்சிகம்!