வீட்டில் வடக்கு திசையில் சற்று உயரமான இடத்தில் குபேரரை வைத்து வழிபடுவது விசேஷமானது. மாதம் ஒருமுறையேனும் குபேர பூஜை செய்து வழிபடலாம்.
குசேலர் குபேரனை விடப் பன்மடங்கு செல்வத்தைக் கொடுப்பதற்கு அதிகாரம் வெள்ளிக்கிழமை இரவு 8 மணி அளவில் சுக்கிர ஹோரை ஆரம்பிக்கும் நேரத்தில் 1, 9, 12, 108 என்ற எண்ணிக்கையில் வீட்டில் நெய்தீபம் ஏற்றுவது, தீபப் போற்றிப் பாடல்களைப் பாடி வழிபடலாம். இதனால் தனவரவு பெருகும்.
பழையன கழிதலும் புதியன புகுதலுமே வாழ்க்கை. வீட்டில் உள்ள தேவையற்ற பழைய பொருள்களைக் கழித்து, வசிக்கும் இடத்தைப் பவித்திரமாக வைத்துக்கொண்டாலே, செல்வம் செழிக்கும்; கடன் பிரச்சனைகள் விலகும்.
கனகதாரா ஸ்தோத்திரம் மகாலட்சுமியின் பெருமையையும் புகழையும் போற்றிச் சொல்லக் கூடிய மகத்துவம் வாய்ந்த ஸ்துதி. ஆதிசங்கரர் அருளிய இந்த ஸ்தோத்திரத்தை வீட்டிலுள்ள பெண்கள் தினமும் அதிகாலை அல்லது அந்திப்பொழுதில் படித்தாலோ, கேட்டாலோ அந்த வீட்டில் செல்வநிலை பெருகும்.
பசும்பால், வலம்புரி சங்கு, துளசி, தேன், செந்தாமரை, வெண்தாமரை ஆகியவை செல்வச் சாந்நித்தியம் அளிப்பவை. இவை வீட்டிலிருந்தால் ஐஸ்வர்யம் பெருகும்.
கோ பூஜை, கஜ தரிசனம், பட்டு வஸ்திர தானம், நதிநீர் சமர்ப்பணம், அதிகாலை நதிநீர் ஸ்நானம் ஆகியவை செல்வ உயர்வுக்கு வழிவகுக்கும்.