Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எண்ணற்ற தலங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஸ்ரீசக்கரத்தின் சிறப்புக்கள் !!

எண்ணற்ற தலங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஸ்ரீசக்கரத்தின் சிறப்புக்கள் !!
ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீசக்கரம், மனித குலத்துக்கு சங்கரரின் அருள்கொடை. காஞ்சி காமாட்சியம்மன் கோயில், திருவானைக்காவல், திருவொற்றியூர் போன்ற எண்ணற்ற தலங்களில் இந்த ஸ்ரீசக்கரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

மனிதர்களின் துயர்களை நீக்கி அவர்களுக்கு அன்னையின் பரிபூரண அருளினை அளிக்கும் உபாயமே ஸ்ரீசக்கரம். உலகை ரட்சிக்கும் நாயகியான ராஜராஜேஸ்வரி மகாமேருவில் உறைபவள். மகாமேருவின் உருவையே ஸ்ரீசக்கரத்தில் பொறிக்கிறார்கள். 
 
மகாசக்தியை மந்திரம், எந்திரம், தந்திரத்தால் வழிபடுவர். இம்மூன்றும் முக்கோணத்தின் மூன்று மூலைகள். அன்னையின் அருளைப் பெற, ஸ்ரீசக்கர வழிபாடே சிறந்தது என்கிறது தேவி புராணம்.
 
முக்காலங்கள், மும்மூர்த்திகள் அனைத்தும் அன்னையின் அமைப்புகளே. இதன்பொருட்டே திரிபுரசுந்தரியை மகாமேரு என்னும் மந்திரம், எந்திரம், தந்திரத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரத்தின் மூலம் வழிபடு கின்றனர். அனைத்து விதமான சக்கரங் களுக்கும் தலையாயது இந்த ஸ்ரீசக்கரம். அதன்பொருட்டே ஸ்ரீசக்கரத்தினை ‘ஸ்ரீசக்கர ராஜ’ என்றே ஆன்மிகத்தில் சிறந்த மகான்கள் குறிப்பிடுவர். ஒன்பது நிலைகளைக் கொண்ட ஸ்ரீசக்ரத்தினைப் பூஜிக்கும் முறை நவா ஆவரணம் என அழைக்கப்படும்.
 
ஸ்ரீசக்கரம் என்பது வரைபடம். மகாமேரு என்பது அதன் உருவம். ஸ்ரீசக்ரத்தை உயரமாகவும், பெரிய வடிவ மாகவும் செய்தால் அது ஸ்ரீமகாமேரு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
 
சவுந்தர்ய லஹரி, லலிதா சகஸ்ரநாமம், தேவி புஜங்கம், பவானி புஜங்கம், தேவிபாகவதம், திருமந்திரம் போன்ற நூல்கள் ஸ்ரீசக்கர வழிபாட்டை சிறப்பித்துக் கூறுகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்றைய நாளில் துர்கையை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் !!