கண்ணேறு என்பது திருஷ்டியின் தூய தமிழ் பெயர். இதற்கு பரிகாரம் கருப்பு மைதான் என்கிறது கண்திருஷ்டி சாஸ்திரம். நமக்கோ அல்லது நம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கோ திருஷ்டி தோஷங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை பல நிகழ்ச்சிகள் மூலமும், சில அறிகுறிகள் மூலமும் தெரிந்து கொள்ளலாம்.
கெட்ட கண்திருஷ்டி விலக கருப்பு பசுவுக்கும் கருப்பு நாய்க்கும் உணவு தந்தால் திருஷ்டியால் உண்டாகும் பாதிப்பு குறையும். முட்டையை தலையை சுற்றிய பின் முட்டையை முச்சந்தியில் போட்டு உடைக்க வேண்டும்.
திருநீறு, கல் உப்பு, மிளகு, மிளகாய் வத்தல், நவதானியங்கள், கடுகு போன்றவற்றை ஒரு காகிதத்தில் பொட்டலம் கட்டி கொள்ளலாம். இரவில் வீட்டிற்கு வெளியே வந்து கிழக்கு முகமாக நின்று மூன்றுமுறை வலமாகவும், மூன்றுமுறை இடமாகவும், தலையை சுற்றி முச்சந்தியில் போட்டு விட்டு, திரும்பி பார்க்காமல் வீட்டிற்கு வந்துவிட வேண்டும்.
திருஷ்டிக் கழிப்பவர் கல் உப்பைக் கையில் வைத்தபடி மூன்றுமுறை சுற்றி பின் தண்ணீரில் போடலாம். தேங்காயினை தலையை சுற்றிய பின் தேங்காயை முச்சந்தியில் போட்டு உடைக்க வேண்டும்.
திருநீறு, கல் உப்பு, மிளகு, மிளகாய் வத்தல், நவதானியங்கள், கடுகு போன்றவற்றை ஒரு காகிதத்தில் பொட்டலம் கட்டி கொள்ளலாம். இரவில் வீட்டிற்கு வெளியே வந்து கிழக்கு முகமாக நின்று மூன்று முறை வலமாகவும், மூன்று முறை இடமாகவும், தலையை சுற்றி முச்சந்தியில் போட்டு விட்டு, திரும்பி பார்க்காமல் வீட்டிற்கு வந்துவிட வேண்டும்.