Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எதற்காக தினமும் பெண்கள் வீட்டில் விளக்கேற்ற வேண்டும்...?

Advertiesment
எதற்காக தினமும் பெண்கள் வீட்டில் விளக்கேற்ற வேண்டும்...?
தீபத்தில் மூன்று தேவிகள் இருக்கின்றார்கள். துர்கை, சரஸ்வதி, லட்சமி மூன்று சக்தியும் தீபத்தில் இருப்பதால் இருளை அகற்றுகின்றது. தீப பூஜை செய்வதால் மனதில் தோன்றும் குழப்பங்களைப் போக்கி உள்ளத்தின் இருளை போக்குகிறது. 

மனதில் ஏற்படும் கவலை, துன்பங்கள், தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. இதனால் தான் தினமும் பெண்கள் வீட்டில் விளக்கேற்ற வேண்டும் என்று முன்னோர்கள், பெரியவர்கள் அறிவுறுத்தினார்கள்.
 
* இரண்டு முகம் - குடும்ப ஒற்றுமை, தன சேர்க்கை, செல்வாக்கு உண்டாகும்.
 
* மூன்று முகம் - காரிய வெற்றி, பராக்கிரமம், தைரியம் கிட்டும்.
 
* நான்கு முகம் - நிலம், வீடுகள், வாகனங்கள், கால் நடை விருத்தி, வியாபார அபி–வி–ருத்தி, சவுபாக்கியம் உண்டாகும்.
 
* ஐந்து முகம் - அஷ்ட ஐஸ்வர்யம் உண்டாகும். சர்வ சித்தி, குறைவில்லா பெருவாழ்வு உண்டாகும்.
 
* வாரம் ஒரு நாள் வெள்ளி அன்றாவது பசு நெய்யில் பஞ்சமுக தீபம் ஏற்றுவது நல்லது.
 
* தீபம் ஏற்றும் பெண்மணி திருமணம் ஆன பெண்ணாக இருந்தால், வளையல், மெட்டி, புருவ மத்தியில் குங்குமம், நெற்றி வகட்டில் குங்குமம் கண்டிப்பாக  அணிந்திருக்க வேண்டும்.
 
* தீபம் ஏற்றுவதற்கு முன்பு விளக்கை மஞ்சள், குங்குமம், சந்தனம், பூ சாத்தி அலங்காரம் செய்திருப்பது அவசியம்.
 
* தீபம் ஏற்றும் போது கணபதி, குரு, லட்சுமி, சரஸ்வதி, நவக்கிரகம், குலதெய்வம், இஷ்டதெய்வங்களை மனதில் நினைக்க வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்க கூடாது ஏன்..?