Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெருமாளுக்கு உகந்த விரதங்களில் முதன்மையான ஏகாதசி விரதம் !!

Advertiesment
பெருமாளுக்கு உகந்த விரதங்களில் முதன்மையான ஏகாதசி விரதம் !!
, புதன், 29 டிசம்பர் 2021 (12:35 IST)
ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஏகாதசிக்கு ஒவ்வொரு தனித்துவமான சக்தி உள்ளது. இந்த ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பவர்கள் அரசர்கள் செய்யும் அஸ்வமேத யாகம் கோதானம் செய்த  பலனை பெறலாம் என்று புராணங்கள் கூறுகின்றன.

பெருமாளுக்கு உகந்த விரதங்களில் முதன்மையானது ஏகாதசி விரதம். மார்கழி மாதத்தில் வரும் இந்த ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பவர்கள் அரசர்கள் செய்யும் அஸ்வமேத யாகம் செய்த பலனை பெறலாம் என்று எல்லா விதமான புராணங்களும் கூறுகின்றன.
 
ஏகாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில் 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிப்பது ஆகும். இந்த நாட்கள் பொதுவாகத் திதி என்று அழைக்கப்படுகின்றன.
 
அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் பதினோராவது திதி ஏகாதசி என்கின்றனர். ஏகாதச எனும் வடமொழிச் சொல்லுக்கு 11 எனப் பொருள். 
 
காலக்கணிப்பில் 15 நாட்களைக் கொண்ட தொகுதியில் பதினோராவது நாளாக வருவதால் இந்த நாள் ஏகாதசி என்ற பெயரால் அழைக்கப்பட்டது. சந்திரனை அடிப்படையாகக் கொண்ட காலக்கணிப்பில் 30 நாட்களைக் கொண்ட சந்திர மாதம் ஒன்றில் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பூரணை ஈறாக உள்ள சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறைக் காலத்தின் பதினோராம் நாளும், பூரணையை அடுத்து வரும் நாளிலிருந்து அமாவாசை முடிய உள்ள கிருஷ்ண பட்சம் எனப்படும்.
 
தேய்பிறைக் காலத்தின் பதினோராம் நாளாக இரண்டு முறை ஏகாதசி திதி வரும். அமாவாசையை அடுத்துவரும் ஏகாதசியைச் சுக்ல பட்ச ஏகாதசி என்றும், பூரணையை அடுத்த ஏகாதசியைக் கிருஷ்ண பட்ச ஏகாதசி என்றும் அழைக்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எந்த கிழமைகளில் பிரதோஷம் வந்தால் என்ன பலன்கள் தெரியுமா...?