Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மறந்தும்கூட இந்த தவறுகளை செய்யக்கூடாது; அது என்ன...?

மறந்தும்கூட இந்த தவறுகளை செய்யக்கூடாது; அது என்ன...?
வீட்டு நிலப்படியில் நின்று கொண்டு பொருட்களை யாருக்கும் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது என்று பெரியவர்கள் கூறுவதுண்டு.

நிலப்படியை பலர் மகாலட்சுமி வாசம் செய்யும் இடமாகக் கருதுகின்றனர் . குடும்ப ரகசியம், எதுவும் வாயிற்படிக்குள் இருக்க வேண்டும். எனவே, வாயிற்படியில் நின்றுகொண்டு நாம் எந்த பொருளாவது கொடுக்கிறோம் என்றால் நாமே அதிர்ஷ்டத்தை அனுப்பி வைப்பதாக அர்த்தமாகும்.

அதையடுத்து, நிலப்படியில் நின்று  கொண்டு தயிர், பால், வெண்ணெய், உப்பு, புளி, காசு அல்லது பணம் உட்பட எந்தப் பொருளை கொடுத்தாலும் வீட்டில் செல்வம் தங்காது . அந்த பொருட்களுடன்  தாய் மகாலட்சுமியும் அந்த வீட்டை விட்டு சென்று விடுவாள் என்பது ஆன்றோர்கள் கருத்து .
 
ஒரு வீட்டின் நுழைவுப்பகுதியே அதன் தலைவாசல் படி தான். அதனால், நிலப்படி வைக்கும் அன்று குடும்பத் தலைவிக்கு வீட்டு விலக்கு தேதி இல்லாமல்  பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் வீட்டில் உள்ள பெரியவர்கள், மற்றும் குடும்பத் தலைவி தான் வாசற்படியை தொட்டு வைக்க வேண்டும்.
 
வாயிற்படியில் நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் வீற்றிருந்து தங்கள் சந்ததியினர் வாழ்க்கையை பார்ப்பதாக ஒரு நம்பிக்கை உண்டு. எனவே, அவர்களை எந்தக் காரணம் கொண்டும் நாம் அவமதிக்கும்படியாக நடந்து கொள்ளக்கூடாது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புரட்டாசி மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய சில முக்கிய விரதங்கள் என்ன...?