தினசரி காலண்டரில் அமிர்த யோகம், சித்த யோகம், மரண யோகம் என்பவை குறிப்பிடப்பட்டிருக்கும். அப்படி என்றால் என்ன என்பது நம்மில் பலரும் தெரிந்திருக்க மாட்டார்கள். இந்த நேரங்களில் செய்யக்கூடியவை எவை, செய்யக்கூடாதவை எவை என்பதை பற்றி பார்ப்போம். அமிர்த யோகம், சித்த யோகம், மரண யோகம் என்பவை யோகத்தின் வகைகள்.
பஞ்சாங்கத்தில் இன்று என்ன யோகம் என்று பார்த்து சுப காரியங்களுக்கும், அசுபகாரியங்களுக்கும் பத்திரிகைகளில் மற்றும் பஞ்சாங்களில் குறிப்பிடப்படுவதுண்டு. யோகங்கள் 27. இவற்றுக்கு தனித்தனி பலன் உண்டு. அதில் விஷ்கம்பம், அதிகண்டம், சூலம், கண்டம், வியாகாதம், வஞ்ரம், வியதீபாதம், பரிகம், வைதீருதி என்பவை தவிர்க்க வேண்டிய யோக நாட்கள்.