Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவனை அர்ச்சனை செய்ய வில்வ இலை உகந்தது ஏன் தெரியுமா...?

சிவனை அர்ச்சனை செய்ய வில்வ இலை உகந்தது ஏன் தெரியுமா...?
ஒரு சமயம் சிவபெருமான் உமாதேவியுடன் கைலாய மலைசாரலில் உள்ள ஒரு சோலையில் வில்வ மரத்தடியில் வீற்றிருந்தார். அன்றைய தினம் ஓர் சிவராத்திரி. 

வில்வ மரத்தின் மீது இருந்த குரங்கு வில்வ இலைகளை பறித்து கீழே போட்டுக்கொண்டே இருந்தது. அந்த இலைகள், மரத்தின் அடியில் வீற்றிருந்த சிவபெருமான்  மீதும், பார்வதிதேவி மீதும் விழுந்து கொண்டே இருந்தன.
 
இதைக்கண்ட பார்வதிதேவிக்கு குரங்கின் மீது கோபம் ஏற்பட்டது. உடனே சிவபெருமான், உமையே! குரங்கின் மீது கோபம் கொள்ளாதே! அது நம் இருவரையும்  வில்வ இலைகளால் அர்ச்சிக்கிறது என்று கூறி, குரங்கிற்கு நல்லுணர்வு உண்டாகுமாறு அருளினார்.
 
உடனே மரத்தின் மீது இருந்த குரங்கு கீழே இறங்கி வந்தது. சிவனை வணங்கியது. அப்பனே! நான் பிழை செய்து விட்டேன். என்னை மன்னிப்பீராக! என்று  வேண்டியது.
 
அதைக்கேட்ட சிவன், உன்னுடைய செயல் எமக்கு மகிழ்ச்சியை தந்தது. அதை வழிபாடாக ஏற்றுக்கொண்டோம். நீ எங்களை வில்வத்தால் பூஜை செய்த பலனாக,  சோழ குலத்தில் தோன்றி உலகை ஒரு குடையின் கீழ் ஆளும் சிறப்பை பெற்று வாழ்வாயாக! என்று ஆசீர்வதித்தார்.
 
வரம் பெற்ற குரங்கு சிவனை வணங்கி, “அய்யனே! அடுத்த பிறப்பிலும் உமது திருவடிகளை மறவாது பூஜிக்க” அருள்புரிவதோடு, அடுத்த பிறவியிலும் குரங்கு முகமே இருப்பதுபோல் சிவபெருமானும் அந்த வரத்தை வழங்கினார்.
 
அந்த வரத்தின்படி, அந்த குரங்கானது கருவூரில் மாந்ததா என்ற சோழ மன்னனுக்கு மகனாக பிறந்தது. அந்த குழந்தை முசுந்தன் என்று பெயர் பெற்று வளர்ந்து  நாட்டின் அரசன் ஆனான். சிவனை மறவாது கருவூர் பசுபதீஸ் வரப் பெருமாள் கோவிலில் திரிப்பணிகள் செய்தான்.
 
சிவனை வழிபட எத்தனையோ வழி முறைகள் இருக்கலாம். ஆனால் வில்வ இலை கொண்டு சிவனை அர்ச்சனை செய்து வணங்கும் போது கிடைக்கும் பலன்கள்  அளவிடற்கரியது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (26-07-2021)!