Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யாரெல்லாம் ருத்ராட்சத்தை அணியலாம் தெரியுமா...?

யாரெல்லாம் ருத்ராட்சத்தை அணியலாம் தெரியுமா...?
, செவ்வாய், 17 மே 2022 (09:24 IST)
சூரியன், சந்திரன், அக்னி இவை மூன்று சிவபெருமானின் முக்கண்கள். ஈசன் தவத்தில் இருந்தபோது அவன் கண்களிலிருந்து வடிந்த கண்ணீரே ருத்ராட்ச மரமாக தோன்றியது.


பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா? என்று சிலருக்கு சந்தேகம் இருக்கும். தாராளமாக பெண்கள் ருத்ராட்சத்தை அணியலாம் என்கிறது புராணம்.

ருத்ராட்சம் அணிந்தால் மேன்மை ஏற்படும். எந்தெந்த முக ருத்ராட்சம் அணிந்தால் என்ன பலன் என்பதை பார்க்கலாம். ருத்ராட்சத்தின் மேலே உள்ள கோடுகளைக் கொண்டு அந்த ருத்ராட்சம் எத்தனை முகம் கொண்டது என அறியலாம்.

ஒரு முக ருத்ராட்சம்: சிவபெருமானின் முகம். பிரம்மஹத்தி தோஷத்தை போக்கும். சூரியனின ஆசி கிடைக்கும். அரசாங்கத்தில் உயர்ந்த அந்தஸ்து அமையும்.

இரண்டு முக ருத்ராட்சம்: தேவதேவி ஸ்வரூபம். இது பாவங்களை அத்தனையும் அடியோடு போக்கும். தேவியின் ஆசியும் பரிபூரணமாக கிடைக்கும்.

மூன்று முக ருத்ராட்சம்: அக்னி ஸ்வரூபம். தோஷங்களையும், பாவங்களையும் நெருங்கவிடாமல் அதை எரித்துவிடும் ஆற்றல் கொண்டது.

நான்குமுக ருத்ராட்சம்: பிரம்மதேவனின் வடிவம். வேதங்கள், புராணங்கள் கற்ற புண்ணிய பலன்களை இரட்டிப்பாக்கும்.

ஜந்து முக ருத்ராட்சம்: சிவபெருமானின் அம்சமாகவே கருதப்படுகிறது. இதற்கு பெயர் காலக்னி. உணவால் ஏற்படும் தோஷத்தை போக்கும்.

ஆறுமுக ருத்ராட்சம்: முருகப்பெருமானின் அம்சம். முருகப்பெருமானின் ஆசியை பெறுவார்கள். விரோதிகள் வீழ்வார்கள். எதிலும் வெற்றி கிட்டும்.

ஏழுமுக ருத்ராட்சம்: மன்மத ஸ்வரூபம். தெரிந்தோ தெரியாமல் செய்த முன் ஜென்ம பாவத்தை போக்கும். பாவங்கள் நீங்கினாலே யோகங்கள் தேடி வரும்தானே.

எட்டு முக ருத்ராட்சம்: விநாயகபெருமானின் சொரூபம். சனிஸ்வரால் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கும். எடுக்கும் முயற்சி வெற்றி பெற வழி கிடைக்கும். விநாயகர் பெருமானின் அருளாசி பரிபூரணமாக கிடைக்கும்.

ஒன்பது முக ருத்ராட்சம்: பைரவ வடிவம். நூறு பிரம்மஹந்தி தோஷத்தை போக்கும் ஆற்றல் கொண்டது. சிவபெருமானின வாகனம் என்பதால் சிவபெருமானின் ஆசியும், முருகப்பெருமானின் அருளும் கிடைக்கும்.

பத்து முக ருத்ராட்சம்: விஷ்ணு சொரூபமாக அமைகிறது. இதனால் ஜாதக தோஷங்கள் நீங்கும். தோல் வியாதி தீரும். கண்திருஷ்டி, செய்வினை பாதிப்புகள் நீங்கும்.

பதினோரு முக ருத்ராட்சம்: ஏகாதச ருத்திர வடிவம். ஆயிரம் அஸ்வமேத யாகங்கள் செய்தால் என்ன பலனோ, அந்த பலனை கொடுக்கும். கோடி பசு தானம் செய்த புண்ணியமும் கிட்டும்.

பன்னிரண்டு முக ருத்ராட்சம்: துவாதச ஆதித்த ஸ்வரூபம். இது பயத்தை போக்கி மன தைரியத்தை கொடுக்கும். புண்ணிய பலனை அள்ளி தரும்.

பதின்மூன்று முக ருத்ராட்சம்: முருகப்பெருமானை பூஜித்தால் என்ன பலனோ அந்த பலனை எளிதாக கொடுக்கும். பெற்றொருக்கு அறியாமல் செய்த பாவத்தை போக்கும்.

பதினான்கு முக ருத்ராட்சம்: சிவபெருமானாகவே கருதப்படுவார்கள். அதிர்ஷ்டம் தேடி வரும். செல்வந்தர்களாக திகழ்வார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வைகாசி மாதத்தில் என்னென்ன அவதாரங்கள் நிகழ்ந்துள்ளது தெரியுமா....?