Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வீட்டில் செல்வம் பெருக எந்த விஷயங்களை நீக்க வேண்டும் தெரியுமா...?

Advertiesment
வீட்டில் செல்வம் பெருக எந்த விஷயங்களை நீக்க வேண்டும் தெரியுமா...?
வீட்டில் புறாக்கூடு கட்டாயம் வைத்திருக்க கூடாது. புறாக்கூடு இருக்கும் வீட்டில் வறுமை என்பது வீடு தேடி வரும், வீட்டின் ஸ்திர தன்மை நீங்கி விடும் , உடல்  நிலை பாதிக்கப்படும்.

வீட்டில் சிலந்தி கூடு எனும் ஒட்டடை இருந்தால் அதனை உடனடியாக அகற்ற வேண்டும். ஒட்டடை இருந்தால் வீட்டில் எதிர் மறை சக்திகள் வலுப்பெறும்,மனதில்  துர் சிந்தனை குடி கொள்ளும்.
 
வீட்டில் உடைந்த கண்ணாடி வைத்திருக்க கூடாது. மட்டுமல்லாது பரிசு பொருளாக இருந்தாலும் கூட , கண்ணாடியில் உள்ள எந்த பொருளாக இருந்தாலும் அகற்ற  வேண்டும். இல்லாவிடில் துரதிஷ்ட்டமான வாஸ்து அமையும்,பிரச்சினைகள் வரும்.
 
தண்ணீர் குழாயில் தண்ணீர் சொட்டு சொட்டாக வடிந்து கொண்டிருந்தால் அதனை சரி செய்ய வேண்டும். அப்படி வடிந்து கொண்டேயிருந்தால் நீர் வீணாவது போல பணம் விரயமாகும். நீரை சிக்கனமாக பயன்படுத்துபவர்களுக்கு பணம் தாராளமாக இருந்து வரும்.
 
வீடுகளிலோ அதன் அருகிலோ தேன் கூடு இருக்க கூடாது. தேன் கூடு வீட்டில் இருந்தால் வறுமை வளரும். கடன் தொல்லைகள் ஏற்படும்.
 
மகாலக்ஷ்மி படத்திற்கு தினமும் காலை, மாலை நெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஏதாவதொன்றில் இரண்டு திரி போட்டு விளக்கு ஏற்றி வீடு, கடை   முழுவதும் சாம்பிராணி புகை காட்டிவருவது பண விஷயத்தில் மிகசிறந்த வசியமாகும்.
 
வடகிழக்கு மூலையில் குடிக்கும் நீரைவைத்து அதில் எலுமிச்சை ஒன்றை போட்டு வைக்கவும், தொடர்ந்து இரண்டு மாதங்கள் செய்து வந்தால் பற்றாக்குறை  நீங்கி  செல்வம் கொழிக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நவகிரக வழிபாட்டில் முக்கிய இடம்பெறும் தர்ப்பைப்புல் !!