Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முருகனுக்கு உகந்த விரதங்களில் மிகவும் முக்கியமானது எது தெரியுமா...?

Advertiesment
Kantha Sashti
, வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (10:03 IST)
முருகனுக்கு உகந்த சஷ்டி விரதம் இருந்தால் அந்த முருகனே கருப்பையில் பிள்ளையாய் வளர்வான் என்பதைத்தான் அப்படி கூறியிருக்கின்றனர். முருகனுக்கு உகந்த விரதங்களில் சஷ்டி விரதம் முதன்மையானது.


இன்று தேய்பிறை சஷ்டி. இன்று சஷ்டி விரதம் இருக்க முடியாதவர்கள் மாலையில் விளக்கேற்றி கந்த சஷ்டி கவசம் படிங்க கவலைகள் காணாமல் போகும்.

மாதந்தோறும் வளர்பிறை, தேய்பிறை சஷ்டி விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு கவலைகள் தீரும். திருமண பாக்கியம் கைகூடும். பிள்ளை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

கந்தன் நம் கவலைகளை தீர்ப்பவன். கந்தனை நினைத்து விரதம் இருந்தால் கவலைகள் பறந்தோடும். முருகனுக்கு உரிய விரதம் சுக்கிரவார விரதம், கார்த்திகை விரதம், சஷ்டி விரதம். இந்த விரதங்களில் முதன்மையானது கந்த சஷ்டி விரதம். சஷ்டி விரதம் இருந்தால் துன்பங்கள் நீங்கும், வேலைவாய்ப்பு பெருகும் கடன் தொல்லைகள் நீங்கும்.

சஷ்டி தினத்தன்று அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு வீடு முழுவதுமோ அல்லது வீட்டின் பூஜை அறையை மட்டுமோ சுத்தம் செய்ய வேண்டும். பின்பு பூஜையறையில் முருகன் படத்திற்கு முன்பு தீபமேற்றி, தூபங்கள் காட்டி, பால்,பழம் நிவேதனம் செய்யவேண்டும்.

காலையிலிருந்து சாப்பிடலாமல் பூஜையறையில் சஷ்டி கவசம், ஸ்கந்த குரு கவசம் படிக்கலாம். வேலை காரணமாக வெளியில் செல்பவர்கள், ஓம் முருகா என்று மனதிற்குள் ஜபித்தவாறு தங்கள் வேலையில் ஈடுபடலாம். இந்த விரதம் இருப்பவர்கள் மாமிசம் சாப்பிடக்கூடாது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (22-04-2022)!