Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வீட்டில் வைக்கக்கூடாத சாமி படங்கள் என்ன தெரியுமா...?

வீட்டில் வைக்கக்கூடாத சாமி படங்கள் என்ன தெரியுமா...?
பூஜை அறையில் எந்த சாமி படங்களை வைக்கவேண்டும் எந்த சாமி படங்களை வைக்கக்கூடாது என சில சாஸ்திரங்கள் உள்ளன. அதை  முறைப்படி பின்பற்றினால் எப்போதும் நன்மையே நடக்கும். இப்போது வீட்டில் வைக்க கூடாத சில சாமி படங்களை பற்றி பார்க்கலாம்.
சாமி படங்களில் சனீஸ்வர பகவானின் படங்களை பூஜை அறையிலோ வைக்கக் கூடாது. நவ கிரகங்களின் படங்களை பூஜை அறையில்  வைத்து எப்போதும் பூஜை செய்யக் கூடாது. நடராஜரின் உருவ படத்தை வீட்டில் வைக்கக்கூடாது.
 
கடவுளின் உருவமானது மிகவும் ஏழ்மையாக இருந்தால் அதாவது மொட்டை அல்லது கோவணம் கட்டிய நிலையில் உள்ள முருக  பெருமானின் படத்தை வீட்டு பூஜை அறையில் வைக்க கூடாது. 
 
கோபமாக இருக்கக் கூடிய காளியின் படத்தை வீட்டில் வைத்து பூஜிக்கக் கூடாது. தலைக்கு மேல் வேல் இருக்கும் முருகனின் படத்தை பூஜை அறையில் வைக்கக் கூடாது. ருத்ர தாண்டவமாடும் உருவம், கொடூர பார்வை உள்ள உருவம், தவம் செய்யும் மற்றும் தலை விரி  கோலங்களில் உள்ள சாமி படங்களை வீட்டில் வைத்து பூஜை செய்யக் கூடாது. 
 
வீட்டில் உடைந்த சிலைகள், சிதைந்த சாமி சிலைகள், கிழிந்த உருவ படங்கள் போன்றவற்றை வீட்டில் வைத்து பூஜை செய்யக் கூடாது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேய்பிறை அஷ்டமியில் பைரவர் வழிபாடு செய்வதால் உண்டாகும் பலன்கள்...!