Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீபங்கள் ஏற்ற மிக உகந்த நன்னாள் எது தெரியுமா...?

தீபங்கள் ஏற்ற மிக உகந்த நன்னாள் எது தெரியுமா...?
தீப வழிபாடு தமிழர்களின் வழிபாடு. தீபம் ஏற்றுவதால் அக்ஞான இருள் நீங்கி, மெய்ஞான வெளிச்சம் கிடைக்கின்றது. இதுவே உயிர்களுக்குப் பேரானந்தத்தைத்  தரக்கூடியது. 
 

சூர்ய அக்னி அம்சம், கிருத்திகை அக்னி அம்சம், அங்காரக அக்னி அம்சம் இந்த மூன்றும் இணைவதால் அன்று மஹா தீபம் என்றும் கார்த்திகை தீபம் என்றும்,  தீபம் ஏற்ற மிக உகந்த நன்னாள் எனவும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
 
லட்சுமி அம்சம் திருக்கார்த்திகை தினத்தன்று, கிலியஞ்சட்டி எனப்படும் களி மண்ணால் செய்யப்படும் விளக்கில் பசு நெய் அல்லது நல்ண்ணெய் விட்டு பஞ்சு திரி  போட்டு, அதில் தான் விளக்கு ஏற்ற வேண்டும். 
 
வீட்டு வாசலில் லட்சுமியின் அம்சமான குத்து விளக்கில் தீபம் ஏற்ற வேண்டும். விளக்கிற்கு பசு நெய் பயன்படுத்துவதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. தேவர்கள்  மற்றும் அனைத்து தெய்வங்களின் வசிப்பிடமாக இருப்பது பசு. பசுவின் பாலில் இருந்து உருவாகும் நெய்யில் அம்பிகை வாசம் செய்வதாக ஐதீகம். ஆகவே,  தீபத்தில் பசுநெய் இடுவதால் அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து, "சிவசக்தி' சொரூப மாகிறது. 
 
விளக்கில் வாசம் செய்பவள் மகாலட்சுமி. திருவிளக்கை தீபலட்சுமி என்பர். துர்கையின் வடிவங்களிலும் தீப துர்கை உண்டு. தீபத்தில், தீபலட்சுமியாகத் திகழ்பவள்,  வைகுண்டத்தில் மகா லட்சுமியாகவும்; சொர்க்கத்தில் சொர்க்கலட்சுமியாகவும்; ராஜ்ஜியத்தில் ராஜ்யலட்சுமியாகவும்; இல்லங்களில் கிரகலட்சுமியாகவும் இருப்பதாக  ஐதீகம்.

ஒரு வீட்டில் இருந்து, இன்னொரு வீட்டுக்கு தீபமேற்றப்பட்ட விளக்கை எடுத்துச் செல்லக் கூடாது என்பது ஐதீகம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (23-11-2020)!