தக்ச மகாராஜன் தனது புதல்வியான சக்தியை மட்டும் யாகத்திற்கு அழைத்திருந்தார், ஆனால் அவரின் மருமகனான சிவபெருமானை அழைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சக்தி கோபத்துடன் அவரின் தந்தை தக்சனிடம் சண்டையிட்டாள்.
அச்சண்டையில் தக்சன் சிவபெருமானை இழிவுபடுத்தியதால், ஆத்திரமடைந்த சக்தி யாக குண்டத்தில் விழுந்தாள். இந்த செய்தியறிந்த சிவபெருமான் கோபத்துடன் வந்து நெருப்பில் இருந்த சக்தியின் உடலை எடுத்து ருத்ர தாண்டவம் ஆடினார். இதனால் அண்ட சராசரமே ஆடியது. தேவர்கள் அனைவரும் பயந்து விஷ்ணுவை நோக்கி மன்றாடினார்கள் .
உடனே விஷ்ணு பகவான் தனது சக்ராயுதத்தை சக்தி தேவி மீது எறிந்தார். அதனால் சக்தி தேவியின் உடல் துண்டு துண்டாக பூமியின் பல்வேறு இடங்களில் சிதறின. அவ்வாறு சிதறிய பாகங்களே சக்தி பீடங்கள்.