Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தியானம் செய்வதன் மூலம் இத்தனை நன்மைகளை பெறமுடியுமா...?

Advertiesment
தியானம் செய்வதன் மூலம் இத்தனை நன்மைகளை பெறமுடியுமா...?
இன்று அனைவருமே சந்திக்க கூடிய ஒரு விஷயம் வாழ்க்கை பிரச்சினைகளை சமாளிப்பது எப்படி என்றுதான். அதற்கான ஒரே தீர்வு மனதை ஒருமுகப்படுத்துவது. 

ஒரு மனிதன் அவனின் மனதின் பிரச்சினைகளை சரி செய்தாலே அவனோட ஆயுள்காலம் அதிகரிக்கப்படும்.
 
உனக்குள் இருக்கும் கடவுளை உணர்வதற்கு ஒரே வழி தியானம் தான். அதை உணர்வதன் மூலம் வாழ்வில் இன்பம் பெற்று அமைதியாக வாழலாம்.
 
உடல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தியானம் ஒரு தீர்வாகும். மனஅழுத்தம் காரணமாக தான் உடலில் இன்று பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.
 
நாம் தியானம் செய்வதன் மூலம் உடல் சமநிலையை அடைந்து தெளிவாகிறது. அதன் மூலம் உடலுக்கு என்ன தேவை என்று முடிவு செய்து அதை செய்வதன் மூலம் எந்த ஒரு நோய் கூட வருவதில்லை.
 
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.உடலுக்கு ஒரு புத்துணர்வை தந்து மகிச்சியாக வைக்கிறது.
மூளை சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.
 
அகத்தின் அழகுக்கு கூட தியானம் உதவுகிறது. தியானம் செய்வதன் மூலம் மன அமைதி தருகிறது. தியானம் செய்வதன் மூலம் ஒருவரின் கோபத்தை கட்டுப்படுத்தமுடியும்.
 
தியானம் செய்வதன் மூலம் நம்மில் என்ன நடக்கிறது என்று நம்மால் உணரமுடிகிறது. தேவையில்லாத நேரத்தில் வரக்கூடிய பயத்தை நீக்கி தெளிவான முடிவு எடுக்க உதவுகிறது. மேலும் குழந்தைகள் தியானம் செய்வதன் மூலம் அவர்களின் ஞாபகசக்தி அதிகரிக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடல் ஆரோக்கியத்தில் செக்கு தேங்காய் எண்ணெய்யின் பயன்கள் !!