Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பணம் பல மடங்கு பெருகுவதற்கான ஆன்மீக ரகசியம் தெரியுமா...?

Advertiesment
பணம் பல மடங்கு பெருகுவதற்கான ஆன்மீக ரகசியம் தெரியுமா...?
வீட்டில் செல்வம் நிலைக்காமல் இருந்தால், அந்த வீட்டில் எதிர்மறையான ஆற்றலை ஈர்க்கும் ஏதோ தவறான செயல்பாடுகள் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். 

வீட்டில் அல்லது பணிபுரியும் இடத்தில் அல்லது உங்களது தொழிற்சாலையில் ஒரு சிறு சந்தன மரப்பெட்டியை வாங்கி வைக்க வேண்டும். அந்தப் பெட்டிக்குள் வில்வம், துளசி, வன்னி, ஆலஇலை, வெற்றிலை, மஞ்சள், குங்குமம், மல்லிகை, தாமரை போன்றவற்றைப் பூஜித்து வைக்க வேண்டும்.
 
இதில் பணத்தை வைத்தெடுக்கும் பழக்கத்தை நாம் கொண்டு வரவேண்டும்.வெள்ளிக்கிழமைகளில் வாரம் அல்லது மாதம் ஒரு வெள்ளிக்கிழமை முழுக்கவும் நாம் சம்பாதிக்கும் பணத்தை வைத்திருக்கவேண்டும்.மறுநாள், அந்தப்பணத்தை மற்ற காரியங்களுக்குப் பயன்படுத்திட வேண்டும்.
 
இப்படி அடிக்கடி செய்தால், நமது பணம்நியாயமாகவும், நல்ல விதமாகவும் நம்மை வந்தடையும்; நம்மிடம் சேரும். பயனுள்ள வகையில் மட்டுமே செலவழியும்.நடுத்தர மற்றும் பாமரக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சந்தன மரப்பெட்டிக்குப் பதிலாக கருப்புப் புள்ளி இல்லாத புது மண்பானை, சுரைக்காய் குடுவை, தேக்கு மரப்பெட்டி இவற்றில் ஏதாவது ஒன்றை வாங்கி மேற்கூறியவாறு பயன்படுத்தலாம். இதன்மூலம், நமது பணம் மது, காமம், புகை, ஆடம்பரம், கேளிக்கை போன்ற வீண் விரையமாகாமல் தற்காத்துக்கொள்ளலாம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐப்பசி பௌர்ணமிக்கு தனிச்சிறப்பு உண்டு ஏன் தெரியுமா...?