Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிவராத்திரி பற்றிய புராணக்கதைகள் என்ன தெரியுமா...?

Advertiesment
சிவராத்திரி பற்றிய புராணக்கதைகள் என்ன தெரியுமா...?
நமது புராணங்களில் சிவராத்திரியை பற்றிப் பல கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒரு யுக முடிவில் பிரளயம் ஏற்பட சகல ஜீவ ராசிகளும் சிவனிடம் ஒடுங்கின.


அண்டங்கள் அனைத்தும் சிறிது அசைவு கூடக் கிடையாது. அப்படியே சகலமும் ஸ்தம்பித்து நின்றன. 
 
உயிர்களிடம் பேரன்பு கொண்ட அன்னை பார் வதி அசையா நின்ற அண்டங்கள் அசையவும், மீண்டும் உயிர்கள் இயங்கவும் வேண்டி நான்கு ஜாமங்களிலும் சிவனைக் குறித்துத் தவம் செய்தாள்.

அம்பிகையின் தவத்துக்கு இறங்கி சிவபெருமான் தன்னிடம் ஒடுங்கியி ருந்த சகல உலகங்களையும் மீண்டும் படைத்து  உயிர்களையும் படைத்தருளினார். 
 
பார்வதி தேவி சிவபெருமானைப் பார்த்து, "பிரபோ. அடியேன் உங்களைப் போற்றிப் பலனடைந்த இந்த நாள் "சிவராத்திரி' என்ற பெயர் பெற்று விளங்கி, நிறைவில் முக்தி அடைய வேண்டும்'' என்று வேண்டுகிறார். சிவபெருமானும் அப்படியே நடக்கட்டும் என்று வரம் அருளுகிறார். அந்தத் திருநாளே மகா சிவராத்திரி நாளாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (05-03-2021)!