Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குத்துவிளக்கு உணர்த்தும் ஐந்து குணங்கள் என்ன தெரியுமா...?

குத்துவிளக்கு உணர்த்தும் ஐந்து குணங்கள் என்ன தெரியுமா...?
அன்பு, நிதானம், சமயோசிதம், மன உறுதி, சகிப்புத்தன்மை, இந்த ஐந்து குணங்களும் குத்துவிளக்கேற்றும் பெண்களுக்கு கிடைக்கும். இவ்வைந்து குணங்களும் சேர்ந்து பிரகாசிக்க வேண்டும் என்பது தத்துவம்.

அடிப்பாகம்: மலர்ந்த தாமரைப் பூப்போல அகன்று வட்டமாக இருப்பதால் தாமரை மலரின் மேல் வீற்றிருக்கும் பிரம்மதேவியைக் குறிக்கிறது.
 
தண்டுப்பாகம்: இது தூணைப்போன்று உயரமாக இருப்பதால் ஓங்கி வளர்ந்து பூமியை ஓரடியாலும் ஆகாயத்தை ஓரடியாலும் அளந்த நெடுமாலாகிய மஹாவிஷ்ணுவைக் குறிக்கின்றது.
 
அகல் விளக்கு: தண்டுக்கு மேலே அகல் போல் நெய் அல்லது எண்ணெய் ஊற்றப்பட்டுள்ள பாகம், சிவனார் கங்கையைச் சடையுள் வைத்திருப்பதுபோல் இருப்பதால் இப்பாகம் உருத்திரனைக் குறிக்கின்றது.
 
திரியிடும் கண்: திரி எரிவதற்குரிய 5 முகங்களும் மஹேஸ்வரனை (பஞ்சமுகன்) குறிக்கின்றது.
 
மேல்தண்டு: அகலின் மேல் கும்ப கலசம் போல் உள்ள உச்சிபாகம் இருப்பதால் ரூபா ரூபத்திருமேனி உடைய சதாசிவனாய் பாவிக்கதக்கது. 
 
எண்ணெய்: அகல் பாகம் முழுவதும் பரவியுள்ள நெய்யானது உருவமின்றி எங்கும் பரவி நிற்கும் நாத தத்துவத்தைக் குறிக்கின்றது.
 
திரி: இந்து தத்துவத்தை அல்லது வெண்மை நிற ஒளியை விளக்குகிறது.
 
சுடர்:  தீப்பிழம்பு இலக்குமிதேவியின் சொரூபமாகக் கருதப்படுகிறது (திருமகள்)
 
ஒளி: பிரகாசமாய் இருப்பதால் இது ஞானமயமான சரஸ்வதி தேவியின் சொரூபத்தை குறிக்கின்றது.
 
சூடு: எரிக்கும் சக்தியானது அழிக்கும் சக்தியாகிய ருத்திராணியின் சொரூபமாகக் கருதப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (06-02-2021)!