Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முருகப்பெருமானின் அருளை பெற சிறந்த மந்திரம் எது தெரியுமா...?

Advertiesment
முருகப்பெருமானின் அருளை பெற சிறந்த மந்திரம் எது தெரியுமா...?
முருகனின் தந்தையான பரமசிவன் பிரபஞ்ச குருவாக கருதப்படுபவர், அவரே தக்ஷிணாமூர்த்தியாக முனிவர்களுக்கு ஞானத்தை அளித்தவர்.

லோக குருவான சிவனுக்கே குருவாக விளங்கியவர் முருகப்பெருமான்.  அதனாலேயே அவருக்கு “சுவாமிநாத சுவாமி” என்ற பெயர் உண்டு.  ஒரு முறை பரமசிவன் ஒரு சாபத்தின் காரணமாக பிரம்மஞானத்தை உணர்த்தும் “ஓம்” என்னும் பிரணவத்தை மறந்து விட்டார்.  
 
பிறகு முருகனிடம் அதை தனக்கு நினைவூட்டும் படி கூறிய போது முருகன் தன்னை குருவாக ஏற்றுக்கொண்டால் பிரணவத்தை உபதேசிப்பதாக கூறினார். சிவனும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு முருகனை மடியில் அமர வைத்துபிரணவ மந்திரமான “ஓம்” என்னும் மந்திரத்தை முருகன் உபதேசிக்க பெற்றுக்கொண்டு நினைவுகூர்ந்தார்.  இந்த சம்பவம் கும்பகோணத்தில் உள்ள சுவாமி மலையில்நிகழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன.  இந்த தளம்மிகவும் சக்திவாய்ந்த தலமாக கருதப்படுகிறது.
 
முருகனைவழிபட சிறந்த மந்திரம் "ஓம் சரவணா பவ " என்பதாகும்.  “ஓம்” என்பது பிரணவத்தை குறிக்கிறது, “ச” என்பது வசீகரிக்கும் சக்தி கொண்டது “ரா” என்பது நம் வாழ்வில் வளத்தை சேர்க்கக்கூடியது “வ”என்பது துன்பம் வறுமை போன்றவற்றை நீக்கக்கூடியது. “ந” என்பது நம் வாழ்வின் பிரச்சனைகளைதீர்க்கக்கூடியது. “ப” என்பது ஈர்க்கும் ஆற்றலை கொண்டது. “வ” என்பது நம் வாழ்வின்எதிர்மறை சக்திகளை அழிக்கும் சக்தி கொண்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமாவாசை தினத்தில் என்னவெல்லாம் செய்யலாம் செய்யக்கூடாது தெரியுமா...?