Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூரியனை வணங்குவதால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டு தெரியுமா...?

Advertiesment
சூரியனை வணங்குவதால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டு தெரியுமா...?
காலையில் எழுந்ததும் சூரியனை பார்த்து வழிபடுவது நன்மையை அளிக்கும். நவகிரகங்களில் முதலில் இருப்பவர் சூரியன்.

சூரியனால் மனிதனுக்கு பெரும் உதவி கிடைத்துக் கொண்டிருக்கிறது. சூரியன் ஒரு மகத்தான சக்தி. சந்திரன் இன்னொரு சக்தி. நட்சத்திரங்கள், கிரகங்கள் எல்லாம்  தனித்தனியே சக்தி வாய்ந்தவை. அவை பூமியோடு நெருங்கிய சம்பந்தமுடையவை.
 
சக்தியை அலட்சியம் செய்கிறவர் கடவுளை அலட்சியம் செய்வதுபோல் அர்த்தம். கடவுளின் பேச்சாக, குணமாக, உருவமாக, வடிவமாக சூரிய, சந்திர கிரகங்கள் நம் முன்னே தோன்றி இருக்கின்றன.
 
சிவ ஆகமங்களில் சூரிய மண்டலத்தின் நடுவே சிவபெருமான் உறைந்திருப்பதாக கூறுகின்றன. சூரியன் சிவனின் அஷ்டமூர்த்தங்களில் ஒருவராகவும், வலது  கண்ணாகவும் இருக்கிறார். அதனால் தான் சைவர்கள் “சிவசூரியன்’ என்று போற்றுகின்றனர். 
 
சூரியனின் தேர் தெற்கில் பயணிக்கும் காலத்தை தட்சிணாயனம் என்றும், வடக்கு நோக்கி பயணிக்கும் காலத்தை உத்ராயணம் என்றும் கூறுவர்.
 
கடவுளை கண்ணால் கண்டறிய முடியாது. பேசிப் புரிந்துகொள்ள முடியாது. அதனால் பார்க்க முடிகிற கடவுளாக நினைத்து சூரியனை வழிபடுகின்றனர்.
 
சூரியனை வணங்குவதால் நமது உடலிற்கும், மனதிற்கும் புத்துணர்வு மற்றும் மன அமைதி கிடைக்கும். ஞாபக சக்தி அதிகரிக்கும். காலையில் ஒரு 5 நிமிடம் மன அமைதியுடன் எந்தவொரு சிந்தனையும் இல்லாமல் சூரியனை பார்த்து தியானம் செய்தால் போதும். அதன் பலனை உணர முடியும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நெய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள் !!