Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரம்ம முகூர்த்ததில் கண் விழிப்பதால் என்னவெல்லாம் நன்மைகள் தெரியுமா....?

பிரம்ம முகூர்த்ததில் கண் விழிப்பதால் என்னவெல்லாம் நன்மைகள் தெரியுமா....?
அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்று நம் சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.


இந்த அதிகாலை நேரத்தில் எழுவதால் உடல் சுறுசுறுப்படையும், ஆரோக்கியமாக இருக்கும். பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 3 மணி முதல் 5 மணிவரையாகும்.
 
அதிகாலை வேலையில் எழுவது பல நன்மைகளைத்தரும் என்று சாஸ்திரங்களும், விஞ்ஞானமும் கூறுகின்றன. வைகறைப் பொழுதில் சூரியனிடம் இருந்து பூமியை  வந்தடையும் ஒளிக் கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இவை நம் உடலில் படும்போது நரம்புகளுக்கு புதுத்தெம்பையும், உற்சாகத்தையும் கொடுக்கின்றன. கண்கள்  ஆரோக்கியத்தையும், உடல் வலிமையையும் பெறுகின்றன. அதனால் தான், சூரிய நமஸ்காரம் செய்வது மிகச் சிறந்த வழிபாடு என்று நம் முன்னோர்கள்  கூறினார்கள்.
 
சனிக்கிழமை அன்று அதிகாலை நேரத்தில் சனி பகவானுடைய கிரகண சக்தி பலம் பெற்றிருப்பதால், அன்றைய தினம் நல்லெண்ணெய் குளியல் செய்வது மிகவும்  சிறப்புடையது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
 
இந்த அதிகாலை நேரத்தில் எழுவதால் உடல் சுறுசுறுப்படையும், ஆரோக்கியமாக இருக்கும். மனஅழுத்தம் இல்லாமலும், பரபரப்பில்லாமலும் காரியங்கள் சிறப்பாக முடியும். உடலுக்கும், உள்ளத்துக்கும் ஊட்டம் தருவது காலையில் கண் விழிப்பதாகும். உஷத்காலம் உஷஸ் என்னும் பெண் தேவதையைப் பற்றி ரிக் வேதத்தில்  சொல்லப்பட்டுள்ளது. இவள் தோன்றிய பின்பே சூரியன் உதயமாகிறான்.
 
இதனாலேயே விடியற்காலை நேரம் உஷத் காலம் எனப்படுகிறது. இந்த தேவதையின் செழிப்பான கிரணங்கள் விடியற்காலையில் பூமியை நோக்கிப் பாய்வதால் தான் அந்த வேளையில் நீரில் மூழ்கி நீராடுதல் விஷேசமாக சொல்லப்படுகிறது. இதனால்தான் அதிகாலை நேரத்தில் நீரும் வெதுவெதுப்பாக காணப்படுகிறது.  அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்று நம் சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நெய் தீபம் ஏற்றி வீட்டில் வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் !!