Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒவ்வொரு முக ருத்திராட்சத்திற்கும் பலன் உண்டு தெரியுமா...?

ஒவ்வொரு முக ருத்திராட்சத்திற்கும் பலன் உண்டு தெரியுமா...?
ஒரு முக ருத்திராட்சம்: சிவஸ்வரூபம் இதைக் கழுத்தில் அணிந்தால் பிரமஹத்திர தோஷத்தைப் போக்கும். இதை அணிந்தவர்களை எதிரிகளால் வெல்ல  முடியாது.

இரண்டு முக ருத்திராட்சம்: சிவன், சக்தி ஸ்வரூபம். இதனை அணிவதால் தெரிந்தும், தெரியாமலும் செய்த இருவினைகளும் நீங்கும். கோஹத்தி (பசுவைக் கொன்ற பாவம் நீங்கும்).
 
மூன்று முக ருத்திராட்சம்: சிவனின் முக்கண். அக்னி ஸ்வரூபம். ஸ்திரீஹத்தி தோஷம் விலகும்.
 
நான்கு முக ருத்திராட்சம்: பிரம்ம ஸ்வரூபம். நரஹத்தி தோஷம் நீங்கும்.
 
ஐந்து முக ருத்திராட்சம்: காலாக்னி ருத்திரஸ்வரூபம். தகாததை உண்டது, தகாததைப் புணர்ந்தது முதலிய பாவங்கள் நீங்கும்.
 
ஆறுமுக ருத்திராட்சம்: கார்த்திகேய ஸ்வரூபம். இதை வலது கரத்தில் அணிந்து கொண்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும், காயதேசம் கரு அழித்தல் முதலிய  பாவங்களைநீக்கும் அஷ்டஐசுவரியமும், தேக ஆரோக்கியமும் உண்டாகும். தெளிந்த ஞானம் உண்டாகும்.
 
ஏழு முக ருத்திராட்சம்: ஆதிசேஷன் அனங்க ஸ்வரூபம். சத்புத்தி, அறிவு, ஞானம் இவற்றைக் கொடுக்கும். ஐஸ்வரியமும், ஆரோக்கியமும் உண்டாகும்.
 
எட்டு முக ருத்திராட்சம்: விநாயகர் ஸ்வரூபம். அன்னமலை, பஞ்சுபொதி, சொர்ணம், இரத்தினம் இவைகளைத்திருடிய பாவங்களைப் போக்கும். நீச்ச ஸ்திரீ, குரஸ்திரீ ஆகியோருடன் கலந்த தோஷம் நீங்கும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
 
ஒன்பது முக ருத்திராட்சம்: கால பைரவ ஸ்வரூபம். புத்தி முக்திகளைக் கொடுக்கும். பிரம்மஹத்தி முதலான பாவங்களை நீக்கி, சிவகதி கிடைக்கச் செய்யும். சகல  காரிய சித்தி உண்டாகும்.
 
பத்து முக ருத்திராட்சம்: ஜெனார்த்தன ஸ்வரூபம் என்றும், எமதர்ம ஸ்வரூபம் என்றும் கூறுவர். பூத பிரேத, பிசாசுக்களையும் மரண பயத்தையும் நீக்கும். தசாபுத்தி தோஷ ங்கள் நீங்கும்.
 
பதினொரு முக ருத்திராட்சம்: ஏகாதசருத்திர ஸ்வரூபம், பல அசுவமேதயாகம், ராஜசுய யாகங்கள், கோடி கன்னிகாதான பலனையும் தரும். எப்போதும்  சௌபாக்கியம் பெருகும்.
 
ருத்திராட்சம் எத்தனை முகம் கொண்டதாக இருப்பினும், அதன் புனிதம் ஒரு தன்மையானது. எளிதில் கிடைக்கும் ருத்திராட்சமணியை வாங்கி, பால், தேன், பஞ்சகவ் யாம், புண்ணிய தீர்த்தத்தாலும், மேலான சிவலிங்க அபிஷேக தீர்த்தத் தால் சுத்தம்செய்து, திரியம்பகம் மந்திரம், திருஐந்தெழுத்தை ஓதிஅணிய வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முன்னோர்கள் கோவில்களை அதிகம் ஏற்படுத்தியது ஏன் தெரியுமா...?