Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோ தானம் செய்வதால் என்னவெல்லாம் பலன்கள் உண்டு தெரியுமா...?

கோ தானம் செய்வதால் என்னவெல்லாம் பலன்கள் உண்டு தெரியுமா...?
, வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (18:11 IST)
குழந்தை பாக்கியம் பெற கோமாதா பூஜையினால் தரித்திரம், துக்கம் விலகுகின்றன. கோபூஜை செய்து வந்தால் வியாபாரம் விருத்தியடையும். நிலையான லாபம் கிட்டும்.


குழந்தை பாக்கியம் பெற விரும்புபவர்கள் கோபூஜை, கோதானம் செய்தால் சிறந்த அறிவுள்ள நல்ல குழந்தைகள் பிறப்பர் என்பதற்கு நமது புராணங்களும் வரலாறுகளும் எடுத்துக் காட்டாகும்.

திருமணம் நடைபெற, நவக்கிரக பீடை, நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் கோபூஜையைச் செய்வது சிறந்த பலனைத்தரும். விவாகம் நடை பெறாதிருந்தாலும், காலதாமதமாகிக் கொண்டே சென்றாலும், நல்ல வரன் அமையவில்லை என்றாலும் இந்தக் கோமாதா பூஜை அவற்றிற்கு ஒரு நல்ல தீர்வினைத்தரும்.

ஆணுக்கு நல்ல பெண் மனைவியாகவும், பெண்ணுக்குச் சிறந்த நற்குணமுள்ள ஆண் கணவனாகவும் கிடைக்கச் செய்யும் பூஜை இந்தக் கோமாதா பூஜை. பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரவும், கணவன்- மனைவிக்குள் ஒற்றுமை ஓங்கவும் இந்தக் கோபூஜை செய்வது அவசியம்.

ரோகம், வியாதி ஆகியவை கோமாதா பூஜையினால் நீங்கி ஆரோக்கிய வாழ்க்கை உருவாகிறது. செல்வச் செழிப்பு எற்படுகிறது. தரித்திரம் நீங்குகிறது.

சிறந்த பசுவை, உயர்ந்த பசுவை ஸ்ரீசுக்தம் சொல்லி பூஜை செய்து, தானம் செய்ய வேண்டும். இந்தக் கோபூஜையினால்,கோதானத்தினால் கோர்ட் விவகாரங்கள், வழக்குகளில் வெற்றி ஏற்படும்.விரோதம் நீங்கும்.

பிதுர் சாபம், ரிஷிகள் சாபம், மூதாதையர் சாபம் ஆகியவை நீங்குகிறது. பித்து, பைத்தியம் போன்றவை கோதானத்தினால் குணமாகி நல்ல கதி கிடைக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீட்டில் சாம்பிராணி காட்டுவதால் ஏற்படும் சில நன்மைகள் என்ன...?