Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எந்த கிழமைகளில் விளக்கினை சுத்தப்படுத்தவேண்டும் தெரியுமா...?

Advertiesment
எந்த கிழமைகளில் விளக்கினை சுத்தப்படுத்தவேண்டும் தெரியுமா...?
தீபத்தினை வழிபடுவதற்கு என சிலவழிமுறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. தெய்வீகமான குத்துவிளக்கின் அடிப்பாகத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணுவும், விளக்கின் மேல் பாகத்தில் ஸ்ரீ சிவபெருமானும் உறைவதாக நம்பிக்கை.

விளக்கில்லாத கோவிலில் ஏதாவது ஒரு திசையில் பஞ்சுத் திரி போட்டுத் தீபம் ஏற்றினால் சூரிய பகவானின் பூரண அருள் கிடைக்கும். இது ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யவேண்டும்.
 
குத்துவிளக்கில் அலைமகள், மலைமகள், கலைமகள் ஆகிய முப்பெரும் தேவியரும் இன்னும் சில சக்திகளும் சக்திகளும் குடிகொண்டு உள்ளார்கள் என்று போற்றப்படுவதால், குத்துவிளக்கு கடவுளின் அம்சமாகவே கருதப்படுகிறது.
 
விளக்கினை உபயோகப்படுத்திய பின்னர், அதில் அழுக்கும் பிசுக்கும் ஏறியிருக்கும். அந்த விளக்கினை தேய்த்து சுத்தம் செய்ய சில குறிப்பிட்ட நாட்களே உகந்தவை ஆகும்.
 
திங்கட்கிழமை நடு இரவு முதல் புதன் கிழமை நடு இரவு வரை குபேர தண தாட்சாயிணி மற்றும் குக குரு தண தாட்சாயிணியும் குடிகொண்டிருப்பதால் இந்த நாட்களில் குத்து விளக்கினை தேய்ப்பதால் இந்த சக்திகள் விலகிவிடும். 
 
வெள்ளி அன்று தேய்த்தால் குபேர சங்க நித யட்சிணி விலகி விடும். ஆகையால், ஞாயிறு, வியாழன் மற்றும் சனி கிழமைகளில் தான் விளக்கினை சுத்தம் செய்யவேண்டும்.
 
ஞாயிறு அன்று சுத்தம் செய்து விளக்கினை ஏற்றினால், கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும். வியாழன் அன்று சுத்தம் செய்து விளக்கினை ஏற்றினால் குரு கடாட்சம் கிட்டும். சனிக்கிழமை அன்று சுத்தம் செய்து விளக்கினை ஏற்றினால் வாகன விபத்துகளில் இருந்து விடுபடலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீட்டின் செல்வ வளத்தை அதிகரிக்கும் செண்பகப்பூ !!