Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்த நாளில் மகாலட்சுமி பூஜை செய்ய ஏற்றது தெரியுமா...?

Webdunia
வாழ்நாள் முழுவதும் பணத்தின் அம்சமான லட்சுமியை விரதம் இருந்து வழிபட்டு வருவது செல்வ சேர்க்கைக்கு சிறந்த பரிகாரமாக இருக்கும். பணம் ஓரிடத்தில் தங்குவதில்லை. அதே போன்று தான் அந்த பணத்திற்கு அதிபதியாக இருக்கும் மகாலட்சுமியின் அருட்கடாட்சம் ஒரே நபரிடத்தில் இல்லாமல் வேறு வேறு நபர்களுக்கு சென்றவாறே இருக்கும்.
செல்வ மகளான மகாலட்சுமியை விரதம் இருந்து வழிபடுவதற்கு அனைத்து தினங்களும் சிறந்தது தான் என்றாலும், வாரந்தோறும் வருகிற வெள்ளிக்கிழமைகள் மற்றும் ஆடி மாதத்தில் வருகின்ற வெள்ளிக் கிழமைகள் வரலட்சுமி விரதம் இருக்க சிறப்பானது. இவை  எல்லாவற்றையும் விட ஐப்பசி மாதத்தில் வருகின்ற தீபாவளித் திருநாள் ஆகியவை லட்சுமி தேவி பூஜை மற்றும் விரதங்கள்  மேற்கொள்வதற்கு சிறந்த தினங்களாக கருதப்படுகிறது.
 
இந்த தினங்களில் விரதம் இருந்து லட்சுமி தேவிக்கு படையல் வைத்து, தீபங்கள் ஏற்றி தூபங்கள் இட்டு, காயத்ரி மந்திரத்தை உங்களால் முடிந்த எண்ணிக்கையில் துதித்து வழிபடுவதால், உங்களுக்கு லட்சுமி தேவியின் பூரண அருள் கடாட்சம் கிடைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments