Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ருத்திராட்சத்தை எந்த நேரங்களில் அணியக்கூடாது தெரியுமா...?

ருத்திராட்சத்தை எந்த நேரங்களில் அணியக்கூடாது தெரியுமா...?
ருத்ராக்ஷ மணிகளில் பல வகைகள் உண்டு. ஒன்று முதல் பதினான்கு முகங்கள் வரை ருத்ராக்ஷ மணிகள் கிடைக்கிறது. முகம் என்பது ருத்ரக்ஷ மணிகள் மேல் உள்ள செங்குத்தான கோடுகள் ஆகும். 
ருத்ரக்ஷத்தை தங்கம், தாமிரம் அல்லது பருத்தி நூலில் மாலையாக அணிவது நல்லது. நூலில் அணியும் பொழுது மட்டும் நெருக்கமாக  கோர்த்து அணிய வேண்டும். 
 
ருத்ரக்ஷ வடிவங்களுக்கு என்று சில முக்கிய செயல்கள் உண்டு. சில பிரத்யேக காரணங்களுக்கும் பயன்படுத்தலாம். ருத்திராட்சம் தாவர வகையாக இருந்தாலும் நீரில் மூழ்கிவிடும். ருத்ராக்ஷத்தில் செயற்கையாக எதையும் இணைக்க முடியாது.
 
ருத்ராக்ஷ மணியின் துளைகளுக்கு அருகே செப்பு நாணயங்களை வைத்தால் ருத்ராக்ஷம் காந்தப்புலம் விலகுவதை போல வேறு திசைக்கு  மாற்றமடையும்.
 
எந்த கிரகத்தின் ஆற்றல் தேவையோ அந்த கிரகத்தின் அமைப்பு கொண்ட ருத்ராக்ஷத்தில் கிரகத்தின் மூலமந்திரத்தை ஜெபம் செய்து  அணியலாம்.
webdunia
ருத்ராக்ஷத்தைக் கொண்டு கோடீஸ்வரனாக முடியாது. ஆனால் அண்டத்தைப் படைத்த ஈஸ்வரனாக முடியும். லஷ்மியை அடைய முடியாவிட்டாலும் ஆன்ம லட்சியத்தை அடையமுடியும். 
 
பிறப்பு இறப்பற்ற நிலையை அடையும் முக்தி எனும் விருட்சத்தை வளர்க்க ருத்ராக்ஷம் என்ற விதையை விதையுங்கள். இறந்த வீட்டிற்கு  செல்லும் பொழுது சிலர் அணிய கூடாது என சொல்லுவார்கள். ருத்திராட்சத்தை காக்கும் கடவுளாக பார்க்க வேண்டும்.
 
எங்கெல்லாம் உங்கள் உடல், மனம் மற்றும் ஆன்மா தவறான சக்திக்கு ஆட்படுமோ அங்கெல்லாம் அணியலாம். இரு முக ருத்திராட்சம் தம்பதிகளுக்கு நல்லது. அதைகாட்டிலும் கெளரிஷங்கர் எனும் வகை உண்டு. அது சிறப்பு வாய்ந்தது.
 
இரவில் அணிய கூடாது என சொல்லுவதற்கு காரணம். தாம்பத்திய காலத்தில் ருத்திராட்சம் அசுத்தமாக கூடாது என்பதற்காக தான். உடலுறவு காலத்தில் உடலின் ப்ராண சக்தி அதிகமாக குறைவு ஏற்படுவதால், அத்தருணத்தில் ருத்திராட்சம் செயல் இழக்க வாய்ப்பு உண்டு.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (26-04-2019)!