Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது ஏன்...?

Advertiesment
வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது ஏன்...?
மங்கலத்தின் அடையாளமாக விளங்கும் குங்குமத்தை சுமங்கலி பெண்கள், கிழக்கு நோக்கி நின்று கொண்டு ஸ்ரீம் ஸ்ரீயை நம; ஸம் சுபம் பூயாத், எனும் லட்சுமி மந்திரத்தை கூறி, தன்னுடைய புருவ மத்தியில் குங்குமத்தை வைக்கவேண்டும். இதனால் சுமங்கலி பெண்களின் வாழ்க்கையில் லட்சுமி கடாட்சம் உண்டாகி,  திருஷ்டி தோஷம் நீங்கும்.
குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம். பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக்  கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
 
சுமங்கலிகளுக்கு குங்குமத்தை அவசியம் கொடுக்க வேண்டும். இதில் இரு விஷயங்கள் உள்ளன. சுமங்கலிகள் நம் வீட்டிற்கு வந்தால் அம்பாளே வந்திருப்பதாக  எண்ண வேண்டும். குங்குமம், ரவிக்கைத்துணி, வெற்றிலைபாக்கு, மஞ்சள்கிழங்கு ஆகியவற்றை வழியனுப்பும்போது கொடுத்தால் அம்பாளின் அருள்  கிடைக்கும். 
 
மற்றொன்று வந்திருப்பவர் நம்மை விட வயதில் சிறியவராக இருந்தால் வாழ்த்தியும், பெரியவராக இருந்தால் வாழ்த்துப் பெற்றும் குங்குமம் கொடுக்க  வேண்டும். தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்ட இதனைச் செய்வது வழக்கில் உள்ளது.
 
தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத் தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆடிமாதத்தில் திருமணம் செய்யக்கூடாதா...? எதனால்...?