சித்திரை மாத ராசிபலன்கள் 2023! – மேஷம்!

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 14 January 2025
webdunia

சித்திரை மாத ராசிபலன்கள் 2023! – மேஷம்!

Advertiesment
Monthly Astro Image
, வெள்ளி, 14 ஏப்ரல் 2023 (19:53 IST)
மேஷம்:

செவ்வாய் அம்சத்தில் பிறந்திருக்கும் நீங்கள் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு காரியங்களை செய்பவர்கள்.

இந்த ஆண்டு கொடுத்த வாக்கை காப்பாற்றி, நன்மதிப்பு பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம். உடற்சோர்வுகள் வரலாம். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் உண்டாகும். வீடு, வாகனம் தொடர்பான செலவு குறையும். வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை. புதிய வீடு கட்டுவதற்கான வேலைகளை இப்போது தொடங்கலாம். வசதியான வீட்டிற்கு குடிபுகவும் வாய்ப்புண்டு.

தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்த தடங்கல்கள் நீங்கும். சாதூரியமான பேச்சு வியாபார விருத்திக்கு கைகொடுக்கும். வியாபாரம் சீராக நடக்கும். அதிக உழைப்பை செய்தவர்களுக்கு ஏற்ற பொருளாதார வளம் வந்து சேரும். புதிய தொழில் ஆரம்பித்தவர்களுக்கு பொன்னான காலகட்டமிது. மூதலீடுகளை திருப்பி எடுப்பதோடு மட்டுமல்லாமல் லாபத்தையும் அள்ளுவீர்கள். வாடிக்கையாளர்கள் அதிகமாக வருவார்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணி தொடர்பாக அலைய நேரிடலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பும் மரியாதையும் சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறைந்து செல்வாக்கு மேம்படும்.  உங்கள் சொல்லுக்குப் பிறர் மரியாதை கொடுப்பர்.

குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே  விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்ய முற்படுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும். தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும். எனினும் மனைவி வழியில் உள்ள உறவினர்களுடன் கருத்து பரிமாற்றங்கள் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை. முயற்சிகளில் தடைகள் வந்தாலும் அதையெல்லாம் முறியடித்து வெற்றிப் பாதையில் பயணீப்பீர்கள். தாய் வழி உறவினர்களுடன் சின்ன கருத்து மோதல்கள் வரலாம்.

கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வாய்ப்புகள் வந்து குவியும். எந்த ஒரு வாய்ப்பையும் நிராகரிக்க வேண்டாம். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். பொருளாதார வளம் மேம்படும். தொழில் உன்னத நிலையை அடையும்.

அரசியல்வாதிகளுக்கு எல்லாம் தாமதமானாலும் நல்லபடியாகவே நடக்கும். நீண்ட நாள் நண்பர்கள் உங்களுக்கு உதவிகள் செய்வார்கள்.  நீங்கள் சொன்ன வாக்கைக் காப்பாற்ற சிறிது போராட வேண்டி வரலாம். மேலும் வீண் அலைச்சலும் ஏற்படலாம். தேவையில்லாத பணவிரையம் ஆகலாம். காரிய அனுகூலம் கிடைக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும்
பெண்களுக்கு எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சாதூரியமான பேச்சு வெற்றிக்கு உதவும். தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு சிறு வாக்குவாதங்கள் வரலாம். வரவுக்கேற்ற செலவுகளும் வந்து சேரும்.

மாணவர்களுக்கு  பாடங்களை நன்கு படித்து மற்றவர்களின் மதிப்புக்கு ஆளா வீர்கள். திறமையான செயல்பாடுகள் வெற்றிக்கு உதவும்.  நண்பர்களிடத்தில் மனக்கிலேசம் ஏற்படலாம். சுபச்செலவுகள் நிகழும். எதிர்காலத்திற்குத் தேவையான முறையான சேமிப்புகளுக்குண்டான ஏற்பாடுகளை செய்வீர்கள்.

பரிகாரம்: தினமும் விநாயகர் அகவல் படித்து விநாயகரை வணங்க எதிர்ப்புகள் விலகும். போட்டிகள் குறையும். எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை மறுதினம் சித்திரை விஷூ கனிகாணும் நிகழ்ச்சி