Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பணத்தை ஈர்க்கும் சக்தி கொண்ட கருப்பு மஞ்சள் !!

Advertiesment
பணத்தை ஈர்க்கும் சக்தி கொண்ட கருப்பு மஞ்சள் !!
கருப்பு மஞ்சள் காளியின் அம்சம் கொண்டதாக கூறுவது வழக்கம். இதை வைத்திருப்போருக்கு செய்வினை, எதிர் மறை சக்திகளின் தீண்டல் அறவே இருக்காது. 


கோர்ட்டுகளில் வழக்குகளை சந்தித்து வருவோருக்கு மிக முக்கியமான பாதுகாவலாகவும் வெற்றியை தேடி தரும் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது.
 
மிக முக்கியமாக இது ஜன வசியம் செய்யக்கூடியது ஆகும். பலர் இதை தன வசியத்திற்காகவே உபயோகப்படுத்துகின்றனர். இதை திலகமாக இட்டு செல்ல தன  வசியம்-பண வரவு சித்திக்கும். சனி மற்றும் குருவினால் ஏற்படும் கஷ்டங்கள் விலகும். காளிக்கு மிக உகந்ததாக கருதப்படும் இது ஜாதகத்தில் ராகுவினால் உண்டாகும் தோஷத்தையும் குறைக்க கூடியது.
 
பணத்தை எதிர் நோக்கி வெளியில் செல்லும் போது இதை நெற்றியில் இட்டு மற்றும் தன்னுடன் எடுத்து செல்லலாம். வீட்டில் மற்றும் வியாபார/தொழில் செய்யும் இடங்களில் பண பெட்டியில் / பீரோவில் வைக்கலாம்.
 
கணவன் மனைவி கருத்து வேறுபாடு மற்றும் சண்டை மிகுந்து இருந்தால், மனைவி இதை குலைத்து முகம் முழுதும் தேய்த்து குளித்து வர தாம்பத்தியம் சிறக்கும்.
 
மேலும் இதை சட்டீஸ்கர் மாநிலங்களில் இன்றும் ஆட்காட்டி விரலில் ஊசியால் சிறிது குத்தி குருதி எடுத்து அத்துடன் குழைத்து நெற்றியில்இட்டு செல்ல எப்பேர்ப்பட்ட வராத பணமும் வந்து சேரும் என்பதாகவும் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செல்வ வளம் பெருகிட சுலபமான சில பரிகாரங்கள் !!